May 28, 2023 5:45 pm

சசிகலாவை சாதாரண வார்டுக்கு மாற்ற நடவடிக்கை!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவை அவசர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து விக்டோரியா அரசு மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஐசியூவில் சிகிச்சை பெற்றுவரும் சசிகலாவை சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

சசிகலா உடல்நிலை சீராக உள்ளது. உணவு உட்கொள்கிறார். அத்துடன் கொரோனா தொற்று குறைந்துள்ளது. சசிகலா எழுந்து உட்கார்ந்து, உதவியுடன் நடக்கிறார்.

இரத்தத்தில் சர்க்கரை அளவு 205 ஆக அதிகரித்துள்ளதால் சசிகலாவுக்கு இன்சுலின் மருந்து செலுத்தப்படுகிறது. அவரை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்