செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா நிபா வைரஸ் தொற்றால் கேரளாவில் 12 வயது சிறுவன் உயிரிழப்பு

நிபா வைரஸ் தொற்றால் கேரளாவில் 12 வயது சிறுவன் உயிரிழப்பு

1 minutes read

கேரளாவின் கோழிக்கோட்டு பகுதியில் நிபா வைரஸ் அறிகுறியுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 12 வயது சிறுவன் ஒருவன் ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்துள்ளான்.

புனே தேசிய வைரஸ் ஆய்வு நிறுவனத்துக்கு அனுப்பப்பட்ட சிறுவனின் பரிசோதனை மாதிரிகளில் நிபா வைரஸ் இருப்பதை உறுதிப்படுத்தின.

இந் நிலையில் மத்திய அரசின் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் ஒரு குழுவை கேரளாவுக்கு அனுப்பி வைத்துள்ளது.

தொற்றினால் இறந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் சம்பந்தப்பட்ட கிராமம், குறிப்பாக மலப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிரமாக பரிசோதனைகள் நடத்துவது உள்ளிட்ட சில உடனடி பொது சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, மத்திய அரசு இக் குழுவுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை உயிரிழந்த சிறுவனுடன் முதன்மை தொடர்புகளை பேணியவர்களையும் அடையாளம் கண்டு தனிமைப்படுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பல வெளவால்களின் உமிழ்நீர் மூலம் நிபா வைரஸ் பரவுகிறது.

தென்னிந்தியாவில் முதல் நிபா வைரஸ் நோய் (NiV) பரவல் மே 19, 2018 அன்று கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் பதிவானது. ஜூன் 1, 2018 வரை மாநிலத்தில் 17 இறப்புகள் மற்றும் 18 உறுதிப்படுத்தப்பட்ட  தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

Image

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.