கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்த குழு கைது

இந்தியாவின் தெலுங்கானாவில் முதுகலை பட்ட படிப்பை மேற்கொண்டு வந்த மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த வாரங்கள் கிழக்கு தொகுதி எம்.எல். ஏ இடம் பொறுப்பு வாய்ந்த பதவியில் இருக்கும் ஒருவரின் குழு கைது செய்யப்பட்டது.

மாணவி துணிச்சலாக பொலிஸிடம் கொடுத்த முறைப்பாட்டை தொடர்ந்தே அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மாணவி தனியார் விடுதியில் தங்கி படித்து வரும் நிலையில் அந்த விடுதி விதியை மீறி கைபேசியில் உரையாடியதை அடுத்து இதனை கண்காணித்த விடுதி பொறுப்பாளர் (பெண்) மிரட்டலுக்கு பயந்து அவருக்கு தெரிந்த நபர் ஒருவரால் அந்த விடுதியில் வைத்தே 1 மாதமாக துன்புறுத்தப்பட்டு வந்துள்ளார். அவர் மாணவியை விருப்பமின்றி எடுத்த வீடியோவை காட்டி எம்.எல் .ஏவின் தனிப்பட்ட உதவியாளருக்கு இணங்குமாறு கேட்டு துன்பப்படுத்தியுள்ளார் இது மேலும் நபர்களென தொடரவே பெண் பொலிஸ் புகார் வழங்கிய நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆசிரியர்