Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் பிரித்தானியா வாழ் 4 வயதுச் சிறுமியின் உயிரைக் காப்பாற்ற stem Cell Donor ஆகுவோம்!!

பிரித்தானியா வாழ் 4 வயதுச் சிறுமியின் உயிரைக் காப்பாற்ற stem Cell Donor ஆகுவோம்!!

2 minutes read

பிரித்தானியா வாழ் நான்கு வயது சிறுமி இஷா கொடுமையான இரத்தப்புற்று நோய்க்கு (Acute Myeloid Leukaemia) உள்ளாகி இருப்பதை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள்.

இஷாவின் உயிரையும், அவரைப் போன்று உயிருக்கு போராடும் பல உயிர்களையும் பாதுகாக்கும் கடமை உங்களுக்கு உள்ளது.

இதற்காக அனைவரையும் stem cell donor ஆக அழைப்பு விடுக்கப்படுகின்றது.

DKMS, தமிழர் உதவிச் சேவை மற்றும் இஷாவின் குடும்பத்தார் இணைந்து நடத்தும் stem cell donorஇற்கு அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Nakshatra hall இல், 18.09.2021 சனிக்கிழமையன்று 10.00 AM – 05.00PM வரை இந்த stem cell donor நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்கு அனைவரையும் அன்புடன் அழைப்பு விடுக்கப்படுகின்றது.

இஷாவின் உயிர்வாழ்வை உறுதிப்படுத்தவும், எம்முறவுகளின் எதிர்கால நோக்கிற்காகவும் நாம் அனைவரும் குருத்தணுக் கொடையாளர் (stem cell donor) ஆகுவோம்.

கடந்த 15 வாரங்களாக Great Ormond Street சிறுவர் வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பெற்றுவந்த நிலையிலும், சிறுமியைத் தாக்கியுள்ள நோயில் மாற்றம் ஏற்படவில்லை என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

2 தடவை நடைபெற்ற வேதிச்சிகிச்சை (Chemotherapy) பயனளிக்காத நிலையில், 4 வயது நிரம்பிய இச்சிறுமியைத் தாக்கியுள்ள கொடுமையான இரத்தப்புற்று நோய்க்கு “தண்டு உயிரணுத் தானம்” (Stem Cell Donation ) மூலமே சுகமாக்கலாம் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சிறுமியின் உயிர்காக்க 3 வாரங்களே உள்ள நிலையில், அதற்குள் பொருத்தமான தண்டு உயிரணுத் தானம் செய்யக்கூடிய நபரை (Stem Cell Donor ) அடையாளம் காணவேண்டிய மிகவும் இக்கட்டான சூழ்நிலை எழுந்துள்ளது.

சிறுமி இஷாவின் இனம் சார்ந்த நபர்களில் மாத்திரமே பொருத்தமான நபரைத் தேர்ந்தெடுக்கலாம்.

தண்டு உயிரணுத் தானம் என்பது மிகவும் இலகுவான (Non invasive) வழிமுறை ஆகும்.

இச்சிறுமியின் உயிரை நீங்கள் காப்பாற்ற விரும்பினால், இச்சிறுமிக்கு நீங்கள் பொருத்தமான நபரா (Matching Donor) என வெறும் 2 நிமிடங்களில் கண்டறிந்துவிட முடியும்.  

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More