Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தமிழ் மக்களிற்கு கூட்டமைப்பொன்று தேவை: வீ.ஆனந்தசங்கரி

தமிழ் மக்களிற்கு கூட்டமைப்பொன்று தேவை: வீ.ஆனந்தசங்கரி

2 minutes read

தமிழ் மக்களிற்கு கூட்டமைப்பொன்று தேவை. ஆனால் தற்போதைய கூட்டமைப்புக்கள் பொருத்தமற்றது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர்நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழர் விடுதலைக்கூட்டணியின் அலுவலகத்தில் இன்று பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,தமிழர் விடுதலைக்கூட்டணியானது தமிழர்களது உரிமைகளிற்காக போராடுகின்ற ஒரு கட்சியாகவும், ஐம்பது ஆண்டுகளிற்கு மேற்பட்ட ஒரு கட்சியாகவும் உள்ளது. தற்போதைய கூட்டமைப்புக்கள் தங்களை பாதுகாப்பதற்காகவே கூட்டு சேர்ந்துள்ளன. தற்போது உருவாக்கப்பட்டுள்ள கூட்டணியிலே விக்னேஸ்வரன் இணைக்கின்றார்.

இவர் நீண்ட காலம் நீதிதிதுறையிலே செயற்பட்ட ஒரு நேர்மையானவர். ஆனால் அவர் இணைந்திருக்கின்ற கூட்டுக்கள் பொருத்தமற்றது. அவர் ஒருதரம் குறித்த கூட்டு தொடர்பில் ஆராய்ந்து பார்க்க வேண்டும். நானாக இருந்தால் ஒருமுறை அவ்வாறு குறித்த கூட்டு தொடர்பில் கவனம் செலுத்தியிருப்பேன்.

இந்த நிலையில் சி.வி விக்னேஸ்வரன் புதிதாக அமைத்துள்ள குறித்த கூட்டணியையும் , ஏனைய கட்சிகளும் ஒற்றுமையாக செயற்படுவதற்காக தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து செயற்பட முன்வரவேண்டும். 2004ம் ஆண்டு காலத்தில் இவ்வாறான ஒரு சூழலே காணப்பட்டது. அன்றும் அனைத்து கட்சிகளும் ஒன்றாக இணைந்து ஒரு கூட்டாக செயற்பட வேண்டிய நிலை காணப்பட்டது.

இன்றும் அவ்வாறான சூழல் காணப்படுகின்றது. இந்த நிலையில் அனைத்து தரப்பினரும் தந்தை செல்வா, ஜீஜீ பொன்னம்பலம் ஆகியோர் இணைந்து ஆரம்பித்த தமிழர் விடுதலைக்கூட்டணி கட்சியில் இணைய வேண்டிய நிலை காணப்படுகின்றது. இதனை உணர்ந்து அனைவரும் ஒன்றாக செயற்பட முன்வர வே்ணடும் எனவும் அழைப்பு விடுத்தார். அவ்வாறு இணைந்து செயற்படுவதற்கா அனைவரும் முன்வாருங்கள். அவ்வாறு இணைந்து எதிர்வரும் தேர்தலில் போட்டியிட்டு அதில் தெரிவாகும் பொருத்தமான ஒருவரிடம் மறுநாளே கட்சியின் தலைமை உள்ளிட்ட பொறுப்புக்களை கையளிக்க தயாராக உள்ளேன் என அவர் இதன்போது தெரிவித்தார்.

தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய ஒரு கூட்டமைப்பாகும். அதன் மூலமே எமது உரிமைகளை வென்றெடுக்க முடியும். ஆனால், தற்போது இருக்கின்ற கூட்டமைப்புக்கள் குறித்த விடயத்திற்கு பொருத்தமற்ற கூட்டமைப்புக்களாக உள்ளது. 2004ம் ஆண்டு காலப்பகுதியிலே பெயரோடும், புகழோடும், பொருளாதாரத்தோடும் வாழ்ந்த தமிழினம் இன்றைய கூட்டமைப்புக்களால் சிதைக்கப்பட்டுள்ளது.

தமிழர்களின் வாக்கு பலத்தை சிதைத்த பெருமை மா வை சேனாதிராஜாவிற்கே உரித்தானது. அவர் தலைமைப்பதவியிலிருந்து விலகிப்போனால் தமிழ் மக்களிற்கு விடிவு கிடைக்கும்.தமிழர் விடுதலைக் கூட்டணியானது ஏனோபோக உரிமை கொண்ட ஓர் கட்சியாகும்.

விடுதலைப்புலிகள் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் அல்ல என்று நான் சொல்லவில்லை. 2004ம் ஆண்டு விடுதலைப்புலிகள் ஆயுதங்களை வைத்துவிட்டு ஜனநாயக ரீதியில் கட்சிகளை ஒன்றிணைத்து ஒற்றுமையாக இருந்திருக்க வே்ணடும் என்ற எண்ணத்தை பிரபாகரன் அப்போ து கொண்டிருந்தார். ஆனால் விடுதலைப்புலிகளை சார்ந்தவர்களும், கூட்டமைப்பிற்குள் இருக்கின்ற கட்சிகளும் ஒற்றுமையையோ, ஜனநாயகத்தையோ விரும்பவில்லை. அவர்களாலேயே விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டார்கள். போரிலே கொல்லப்பட்ட அத்தனை தொகையான மக்களிற்கும் பொறுப்பு கூறவேண்டியவர்களாக சேனாதிராஜாவே உள்ளார்.

முன்னால் ஜனாதிபதி சந்திரிக்கா தனது ஆட்சிக்காலத்தில் கூட்டமைப்பின் 22 பாராளுமன்ற உறுப்பினர்களையும் சாதகமாக பயன்படுத்திக்கொண்டார். அந்த அரசே புலிகளை அழித்தது. தங்களைபாதுகக்கவு்ம, தங்கள் சுயநலன்கறிக்காகவும் உருவாக்கப்பட்டதே இந்த கூட்டமைப்புக்கள். 2004ம் ஆண்டு விடுதலைப்புலிகள் பொறுமையாக இருந்திருந்தால். தமிழ் மக்களிற்கான தீர்வு எட்டப்பட்டிருக்கும் என தான் நம்புகின்றேன் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, பல்கலைக்கழக மாணவர்களின் பகிடிவதை தொடர்பிலும் அவர் கருத்து தெரித்தார்.கிளிநொச்சி மாவட்டத்தை தனி மாசட்டமாக்கி பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகும் மாணவர்களின் விகிதாசாரத்தை அதிகரிப்பதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு தனிமாவட்டம் ஆக்க்படப்டது, நீண்ட எண்ணங்களோடும் எதிர்பார்ப்புக்களோடும் பெரும் கஷ்டங்களிற்கு மத்தியில் தமது கல்விகளை தொடர்கின்ற மாணவர்கள் அதே சமூகத்தால் பகிடிவதை்குள்ளாக்கப்படுவதும், அவர்கள் துன்புறுத்தப்படுவதும் மிக வேதனையானதும் , வெட்கப்பட வேண்டிய விடயமுமாகும். பெற்றோர்கள் மிகவும் கஷ்டத்துடன் தமது பிள்ளைகளை பல கனவுகளோடு பல்கலைக்கழகத்திற்கு அனுப்பியுள்ளார்கள். ஆனால் மாணவர்கள் இதை உணர்ந்துகொள்ளாது செயற்படுகின்றமை கவலையாக உள்ளதாகவும் அவர் தெரிவித்ததோடு, அது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More