இராணுவத்தினரிடம் கணவரை கையளித்த நந்தினி.

வாகனங்களிலும் டெக்டர்களிலும் பிள்ளைகளை இராணுவத்தினர் ஏற்றி வந்ததை நாங்கள் பார்த்தோம் என இராணுவத்தினரிடம் தனது கணவரை கையளித்த நந்தினி தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முன்னெடுத்த போராட்டத்தின்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கட்ணவாறு தெரிவித்தள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,வலிந்து காணாமர் ஆக்கப்பட்டவர்களின் தற்போதைய நிலை என்ன என்பதை சர்வதேசம் வெளிப்படுத்த வேண்டம்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர் போராட்டத்தை ஆரம்பித்து 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. நான்காவு ஆண்டாக குறித்த போராட்டம் இன்று தொடர்கின்றது. இந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகள் எங்கு உள்ளனர் என்று தெரியவில்லை. அவர்களிற்கு என்ன நடந்தது என்பதை இலங்கை அரசு வெளிப்படுத்த வேண்டும். எனது கணவரை இறுதி யுத்த்தில் இராணுவத்தினரிடம் கையளித்திருந்தேன். காணாமல் போனவர்கள், அழைத்து செல்லப்பட்டவர்கள் ஒருபுறமிருக்க எம்மால் கையளிக்கப்பட்டவர்கள் எங்கே? எனது கணவரை இராணுவத்தினரிடம் கையளித்திருந்தேன். அவர்கள் இருக்கின்றார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது. அவர்கள் எங்கேயோ மறைக்கப்பட்டு உள்ளார்கள். அவர்கள் மீண்டும் வருவார்கள் என்ற நம்பிக்கையிலேயே நாங்கள் உள்ளோம்.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் இல்ஙகை அரசுக்கு சர்வதேசம் கடும் அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும். அவ்வாறான அழுத்தங்களின் மத்தியில் இலங்கை அரசு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான உண்மை நிலையை வெளிப்படுத்த வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. ஓ எம் பி அலுவலகத்தில் முக்கிய சாட்சிகளுடனான ஆதாரத்தை வழங்கியுள்ளோம். அவர்களை அந்த அலுவலகத்தினரால் கண்டு பிடிக்க முடியவில்லை. அவர்கள் மீது எமக்க நம்பிக்கையின்மை ஏற்பட்டுள்ளது. வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கு தீர்வை பெற்றுத்தராது மாதாந்த கொடுப்பனவாக 6 ஆயிரம் ரூபாவை வழங்க உள்ளதாகவும், அதை பெற்றுக்கொள்ளுமாறும் அவர்கள் கோருகின்றனர். எமக்கு அவர்களால் வழங்க்படும் எந்த உதவியும் தேவை இல்லை. எமக்கு எமது உறவுகளு தேவை. அவர்கள் உயிருடன் இருக்கின்றார்க்ள, மறைக்கப்பட்டுள்ளார்கள் என்றே நம்புகின்றோம். அந்தநம்பிக்கையில்தான் இவ்வாறான போராட்டங்களை நாம் முன்னெடுக்கின்றோம்.
இறுதி யுத்தத்தின்போது பிள்ளைகள் எங்கேயும் போகவில்லை. ஒரு முலையில் எல்லோரையும் அடங்கிய நிலையில் எல்லோரையும் அரசாங்கம் பொறுப்பேற்று, அவர்கள் காயமுற்றவர்களாகவோ, உறுப்புகளை இழந்தவர்களாகவோ வலிகளுடனும், வேதனைகளுடனும் வாகனங்களிலும், ரக்ரர்களிலும் எமது கண்முன் ஏற்றி வந்ததை நாங்கள் பார்த்தனாங்கள். அவர்களை எதோவொரு மூலையில் அரசாங்கம் வைத்து பராமரித்தக்கொண்டு இருக்கின்றது. அவர்களிற்கு என்ன நடந்தது, அவர்கள் எங்கு இருக்கின்றார்கள் என்ற உண்மையை அரசாங்கம் எம்கு சொல்லும் வரையும் சர்வதேசம் அழுத்தத்தினை இலங்கை அரசாங்கத்திற்கு கொடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

ஆசிரியர்