வனப்பகுதியில் தீ வைக்கும் நபர்களை கைது….

வனப்பகுதிகளில் தீ வைக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அனர்த்தமுகாமைத்து மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 129 தீ வைப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி கூறியுள்ளார். தீ வைக்கப்படும் சம்பவங்களால் நாட்டின் சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், வனப்பகுதியில் தீ வைக்கும் நபர்களை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுவதாக பிரதீப் கொடிப்பிலி மேலும் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்