10
யாழ்.ஊரெழு பகுதியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதல் நடாத்தப்பட்டிருக்கின்றது.ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த தாக்குதலை நடாத்திவிட்டுத் தப்பி ஓடியுள்ளனர். சம்பவத்தில் வீட்டிலிருந்த ஒருவருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்நிலையில் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.