December 2, 2023 10:17 pm

மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் அதிபர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

நுவரெலியாவில் 13 வயது மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த அதிபர்!கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் மீள ஆரம்பிக்கவுள்ளது.

இந்த நிலையில் பாடசாலை சிரமதானத்திற்கென அழைத்து 13 வயது மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

நுவரெலியா மாவட்டம் ராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோட்டப் பாடசாலையொன்றில் கல்விகற்கும் தரம் 7ம் வகுப்பைச் சேர்ந்த மாணவிகள் சிரமதானப்பணிக்காக பாடசாலைக்கு, அதிபரினால் அழைக்கப்பட்டிருந்தனர்.
சிரமதானப் பணி நிறைவுற்ற நிலையில் ஒரு மாணவி மட்டும் அதிபரினால் தடுத்து வைக்கப்பட்டு, பின் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அதன்பின்னர் அயலவர்களின் உதவியுடன் பொலீசாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு விரைந்த பொலிஸார், மாணவியை மீட்டுள்ளனர்.மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய அதிபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த மாணவி சிகிச்சைகளுக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்