October 4, 2023 5:00 pm

முகக்கவசம் அணிய மறுத்த 1,441 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

முகக்கவசமின்றி பொது இடங்களில் நடமாடிய 1,441 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.இன்று காலை 6 மணி வரையுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அத்துடன் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 39 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 377 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.24 மணித்தியாலங்களுக்குள் இவர்கள் கைது செய்யப்பட்டதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, இந்த காலப்பகுதிக்குள் மதுபோதையுடன் வாகனம் செலுத்திய 96 சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்