May 31, 2023 4:59 pm

வாகன விபத்து; வேட்பாளர்கள் இருவர்……..

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

சங்குப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் வேட்பாளர்கள் இருவர் உட்ப்பட நால்வர் படுகாயம்

நேற்று மாலை 6.35 மனியவில் இடம்பெற்ற வாகன விபத்திலையே மூவர் படுகாயம் அடைந்து யாழ் போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது

பூநகரி பகுதியில் இருந்து யாழ் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கர வண்டியும் யாழில் இருந்து பூநகரி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த டிப்பர் வாகனமும் சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகாமையில் விபத்துக்குள்ளானதில்

முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த யாழ் தேர்தல் தொகுதியில் சுயட்சைக்குழுவில் போட்டியிடும் கிளிநொச்சியை சேர்ந்த இரண்டு வேட்ப்பாளர்களும் முச்சக்கர வண்டி மற்றும் டிப்பர் வாகன சாரதியும் காயங்களுக்கு உள்ளான நிலையில் நோயாளர் காவு வண்டி மூலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்திய சாலைக்கு மாற்றம் செய்து அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்

விபத்துக்குள்ளான இரண்டு வாகனங்களும் தடம்புரண்டமையால் சிறிது நேரம் சங்குப்பிட்டி ஊடான போக்குவரத்து தடைப்பட்டு இருந்தது.

குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு முன்னெடுத்து வருகின்றது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்