கொரோனா தடுப்பூசி சோதனை வெற்றி.

கொரோனா வைரஸ் தொற்று உலகையே அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டு வர உலகம் முழுவதும் சுமார் 100-க்கு மேற்பட்ட தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் அனைத்தும் தற்போது வரை சோதனையிலேயே இருந்து வருகிறது.

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ள தடுப்பூசி இறுதி கட்டத்தை எட்டியதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் சோதனை வெற்றி பெற்றதாக தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக 1077 நபர்களுக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டதில் அவர்களுக்கு கொரோனா எதிர்ப்பு ஆற்றல் கிடைத்திருப்பது சோதனையில் உறுதியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 கோடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திடம் பிரிட்டன் ஆர்டர் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ்  மக்களை அச்சுறுத்தி வரும் இந்த நேரத்தில் ஆக்ஸ்போர்டின் அறிவிப்பு மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ஆசிரியர்