கேப்பாபிலவு இராணுவப்படைத்தள தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிறைவு.

முல்லைத்தீவு கேப்பாபிலவு இராணுவப்படைத்தள தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில் 14 நாட்கள் கண்காணிப்பினை நிறைவு செய்த 149 பேர் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்கள்.

எதியோப்பியா நாட்டிலிருந்து நாடுதிரும்பியவர்கள் கட்டுநாயக்கா விமான நிலைத்தில் இருந்து தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்காக முல்லைத்தீவு கேப்பாபிலவு இராணுவப்படைத்தள தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்கள்.

இவர்கள் 14 நாட்கள் கண்காணிப்ப மற்றும் பி.சி.ஆர் பரிசோதனையின் போது இவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்படாத நிலையில் இவர்கள் நேற்று மாலை வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்கள்.

 

ஆசிரியர்