வெளிநாட்டுக் கொள்கையில் இந்தியாவுக்கு முதலிடம் | ஜயநாத் கொலம்பகே

புதிய அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கொள்கையில் முதலிடம் இந்தியாவுக்கு என வெளிவிவகார அமைச்சின் புதிய செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் கருத்து தெரிவித்த அவர், அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கொள்ளை அணி சேராக்கொள்கை என அடையாளப்படுத்த முடியும் என சுட்டிக்காட்டினார்.

இலங்கை – இந்திய, அமெரிக்க, ஜப்பான் அமைப்புகளின் தேவைகளுக்கு அமைய இந்தியா முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்க கடமைப்பட்டுள்ளோம் எனவும் அவர் கூறியுள்ளார்.

எனினும் அவரது இந்த கருத்து ஜனாதிபதி அல்லது அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவானதா என்பதை வெளிவிவகார அமைச்சின் புதிய செயலாளர் ஜயநாத் கொலம்பகே தெரிவிக்கவில்லை.

அத்தோடு ஜயநாத் கொலம்பகே சம்பந்தப்பட்டிருந்த பாத் பைண்டர் நிறுவனம் கடந்த நல்லாட்சி அரசாங்கத்திற்காக உருவாக்கிய இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை சம்பந்தமாக வழிமுறைகள் தொடர்பான ஆவணம் ஒன்றை தற்போதைய அரசாங்கத்திடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறமையும் குறிப்பிடத்தக்கது..

ஆசிரியர்