முல்லைத்தீவு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கான மருத்துவ முகாம்

முல்லைத்தீவு பிராந்திய வைத்தியசாலையின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கான மருத்துவ முகாம் 22.09.2020 செவ்வாய்க்கிழமை மாவட்ட செயலக புதிய மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

இந் நிகழ்வினை மாவட்ட செயலாளர் க.விமலநாதன் அவர்கள் கலந்து கொண்டு உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

இதன்போது தொற்றா நோய்களான இரத்த சீனி மட்டம், இரத்த கொலஸ்ரோல் மட்டம், உடற்திணிவு சுட்டி, வயிற்றுப்பருமன்,

இரத்த அழுத்தம்(பிறசர்) ஆகிய மருத்துவப்பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இதன்போது மாவட்ட வைத்தியசாலை வைத்தியர் மற்றும் உத்தியோகத்தர்களைக் கொண்டு மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது

ஆசிரியர்