Saturday, January 23, 2021

இதையும் படிங்க

இணைய நிதி மோசடிகள்; மத்திய வங்கி எச்சரிக்கை!

கடவுச் சொல், OPT இலக்கம் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல் சமூக ஊடகங்கள், இணைய அடிப்படையிலான பயன்பாடுகள் மற்றும் தொலைபேசி கட்டணம் செலுத்தும் விண்ணப்பங்கள் மூலம்...

கொரோனாவும் தமிழர்களும் | உலகத்தமிழர் எதிர்கொள்ளும் பேரிடர் | மெய்நிகர் சந்திப்பு!

கொரோனாவும் தமிழர்களும் | உலகத்தமிழர் எதிர்கொள்ளும் பேரிடர் எனும் தலைப்பில் மெய்நிகர் சந்திப்பு (சூம் உரையாடல்) எதிர்வரும் 24ஆம் திகதி இடம்பெறவுள்ளது....

பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் கால அவகாசம்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனின் விடுதலை தொடர்பாக முடிவு எடுப்பதற்கு ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் ஒரு வாரம்...

கடுமையான நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சசிகலா!

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு நிமோனியா காய்ச்சல் கடுமையாக இருப்பதாக பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனை தெரிவித்துள்ளது. இது குறித்து வைத்தியசாலை...

இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் தீ விபத்து!

மேற்கு இந்தியாவில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவில் (Serum Institute of India's) ஏற்பட்ட தீ விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.

சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்க இரு வாரங்களுக்கு மேல் ஆகலாம் | சீனா

நூற்றுக்கணக்கான மீற்றர் நிலத்தடியில் சிக்கியுள்ள சுரங்கத் தொழிலாளர்கள் குழுவை மீட்பதற்கு இன்னும் இரண்டு வாரங்களுக்கு மேல் செல்லலாம் என சீன மீட்புக் குழுக்கள் கூறுகின்றன.

ஆசிரியர்

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக பிரபாகரன் குமார் ரட்ணம்

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக திரு. பிரபாகரன் குமாரட்ணம் நேற்று(செவ்வாய்கிழமை) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ  முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்திருந்தார்.

கண்டி மாவட்டத்தின் புஸ்ஸல்லாவ நகரில் பிறந்த இவர். தலவாக்கலை, தேவிசிறிபுரவில் வசித்த திரு.குமாரரட்ணம் மற்றும் காலஞ்சென்ற லீலாவதி ஆகியோரின் கனிஸ்ட புதல்வராவார்.

புஸல்லாவ பரிசுத்த திருத்துவக்கல்லூரியில் ஆரம்பக்கல்வியையும், தலவாக்கலை சுமண மகா வித்தியாலயத்தில் உயர்தரக்கல்வியையும் கற்ற இவர் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று கொழும்புப்பல்கலைக்கழக சட்டப்பீடத்திற்கு தெரிவாகி சட்டஇளமாணிப்பட்டத்தை பெற்றதுடன் 1993ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற சட்டத்தரணியாகவும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

அதன்பின்னர் காலஞ்சென்ற ஜனாதிபதி சட்டத்தரணி ஏ.ஊ மோதிலால் நேருவின் கனிஸ்ட சட்டத்தரணியாகப் பணியாற்றினார்.

கல்வியில் மாத்திரமின்றி 1990/1991 ஆண்டுகளில் கொழும்பு பல்கலைக்கழக கால்பந்தாட்ட அணியின் தலைவராகவும் விளங்கிய பெருமையும் இவரைச் சாரும்.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் தொழிற்சட்டம், குற்றவியல் நீதி, சர்வதேச மனித உரிமைகள் சட்டம் ஆகியவற்றைப்பயின்று தனது சட்டமுதுமாணிப்பட்டத்தை நிறைவு செய்ததுடன் பீஜித்தீவு நீதிமன்றங்களில் பரிஸ்ரராகவும் (Barrister) சொலிசிற்றராகவும் (Solicitor) பதவிப்பிரமாணம் பெற்றுள்ளார்.

1995ஆம் ஆண்டு சட்டமாஅதிபர் திணைக்களத்தில் அரச சட்டவாதியாக இணைந்து கொண்ட திரு. பி.குமாரட்ணம், தனது மும்மொழி ஆற்றலாலும், விடாமுயற்சியாலும் 2005ஆம் ஆண்டு சிரேஸ்ட அரச சட்டவாதியாகவும், 2014ஆம் ஆண்டு பிரதி சொலிசிற்றர் ஜெனரலாகவும் 2018ஆம் ஆண்டு சிரேஸ்ட பிரதி சொலிசிற்றர் ஜெனரலாகவும் பதவி உயர்வுகளைப் பெற்றுக் கொண்டார்.

சட்ட மாஅதிபர் திணைக்களத்தில் கடமையாற்றிய காலப்பகுதியில் மோட்டார் போக்குவரத்துப்பிரிவு, பொதுமக்கள் பிராதுப்பிரிவு, சிறுவர்களுக்கெதிரான துஸ்பிரயோகப்பிரிவு, குடியவரவு மற்றும் குடியகல்வுப்பிரிவு ஆகிய பிரிவுகளை மேற்பார்வை புரிந்ததுடன் வடக்கு, கிழக்கு, களுத்துறை மற்றும் நீர்கொழும்பு மேல்நீதிமன்ற வலயங்களை மேற்பார்வை செய்யும் பணியையும் செவ்வனே நிறைவேற்றியுள்ளார்.

இவர் நாடளாவிய ரீதியில் நீதிவான் நீதிமன்றம் முதற்கொண்டு உயர்நீதிமன்றம் வரை பல நீதிமன்றங்களிலும் தோன்றி ஆயிரக்கணக்கான வழக்குகளில் தன் வாதத்திறனால் நீதியை எட்ட வழிசமைத்துள்ளார்.

பொலிஸ் திணைக்களம், மதுவரித்திணைக்களம் உள்ளிட்ட பல திணைக்களங்களுக்கு பயிற்சிக் கருத்தரங்குகளை வழங்கியுள்ளார்.

2017ஆம் ஆண்டு இவரது பெயர் ஊடகங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் பிரபல்யமாகப் பேசப்பட்டது. 2015ஆம் ஆண்டு புங்குடுதீவில் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வித்யா சிவலோகநாதன் வழக்கில் யாழ்ப்பாணத்தில் மூன்று நீதிபதிகள் முன்னிலையில் தீர்ப்பாயத்தில் (Trial at Bar) தோன்றி எண்மருக்கு மரணதண்டனையை பெற்றுக் கொடுத்த பெருமையையும் இவரையே சாரும்.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராசா மகேஸ்வரன் கொலை செய்யப்பட்ட வழக்கிலும் சிறப்பு வழக்குத்தொடுநராகத் தோன்றியதுடன் மட்டக்களப்பு மயிலந்தனை படுகொலைகள் வழக்கிலும் கனிஸ்ட சட்டவாதியாகத் தோன்றியுள்ளார்.

உள்நாட்டில் மாத்திரமின்றி வெளிநாட்டிலும் தனது சேவையை ஆற்றியுள்ளார். 2012 – 2014 வரையான காலப்பகுதியில் பீஜித்தீவின் மேல்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் நீதிபதியாகக் கடமையாற்றி முந்நூறுக்கும் மேற்பட்ட கட்டளைகளையும், தீர்ப்புக்களையும் வழங்கியுள்ளார்.

2014ஆம் ஆண்டு ஏப்ரல் மாதகாலப்பகுதியில் பீஜித்தீவின் உயர் நீதிமன்ற நீதிபதியாகவும் பணிபுரிந்துள்ளார்.

2000ஆம் ஆண்டு தொடக்கம் 2011ஆம் ஆண்டு வரை இலங்கை சட்டக்கல்லூரி நுழைவுத்தேர்வின் பரீட்சகராகவும் 2016ஆம் ஆண்டு தொடக்கம் 2020 ஆம் ஆண்டு வரை இலங்கை சட்டக்கல்லூரியின் சட்டமாணவர்களின் பரீட்சகராகவும் பணிபுரிந்துள்ளார்.

இவர் சுதர்சனி குமாரரட்ணத்துடன், மணவாழ்வில் இணைந்து மிதுசனா, தக்சனா ஆகிய இரு புதல்விகளும் உள்ளனர்.

திரு.பி. குமாரரட்ணம், சட்டமாஅதிபரால் ஜனாதிபதி விசேட ஆணைக்குழுவிற்கு உதவிபுரிய பல்வேறு சந்தர்ப்பங்களில் சட்டவாதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய அமெரிக்கா, அவுஸ்ரேலியா, இங்கிலாந்து, ஜப்பான், வியட்நாம், இந்தோனேசியா மற்றும் இந்தியா உள்ளிட்ட பல சர்வதேச நாடுகளில் இடம்பெற்ற கருத்தரங்குகள், சர்வதேச சட்ட மாநாடுகள், பயிற்சிகளில் பங்கேற்று தனது கட்டுரைகளையும் சமர்ப்பித்துள்ளார்.

சட்டமாஅதிபர் திணைக்களத்தில் பல சட்டவாதிகளுக்கும் வழிகாட்டியாகத்திகழ்ந்ததுடன் பயிலுனர் சட்டத்தரணிகள் பலருக்கும் பயிற்சிகளையும் வழங்கியுள்ளார். தற்போது மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு பதவியேற்று தன் புகழாரத்தை நீதித்துறையிலும் பதித்துள்ளார்.

இதையும் படிங்க

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கட்டமைப்பை மீளாய்வு செய்ய வேண்டும்!

இலங்கையில் குற்றவியல் நீதி அமைப்பு கவனிக்க வேண்டிய பிரச்சினைகளை ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக இலங்கையில் உள்ள குற்றவியல்...

இந்திய கொரோனா தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டுக்கு இலங்கை அனுமதி!

இந்தியாவின் கொரோனா தடுப்பூசிக்கு அவசர கால அடிப்படையில் இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியமையை வரவேற்பதாக இலங்கைக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான இந்திய தூதரகம் தனது...

தற்சாா்பு இந்தியாவை எண்ணி நேதாஜி பெருமிதம் கொண்டிருப்பார்!

தற்சாா்பு இந்தியாவை எண்ணி நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் பெருமிதம் கொண்டிருப்பார் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கடந்த 1897-ஆம் ஆண்டு ஜனவரி 23-ஆம் திகதி...

திரிணாமூல் காங்கிரஸ் அமைச்சர் ராஜிப் பானர்ஜி அமைச்சரவையில் இருந்து இராஜினாமா!

திரிணாமூல் காங்கிரஸ் அரசின் அமைச்சர் ராஜிப் பானர்ஜி அமைச்சரவையில் இருந்து இராஜினாமா செய்துள்ளார். கட்சியில் தமக்கு எதிராக சிலர் செயற்பட்டதாக கூறி அவர் இராஜினாமா செய்துள்ளதுடன்...

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு கொரோனா தொற்று!

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பி.பி.சி. சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் பரிசோதனையில்...

கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கான ஒத்திகை இன்று!

கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கான ஒத்திகை நடவடிக்கைகள் (இன்று சனிக்கிழமை) முன்னெடுக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதன்படி, குறித்த ஒத்திகை நடவடிக்கைகள் மூன்று பிரதேசங்களில் முன்னெடுக்கப்படவுள்ளதாக, பிரதி சுகாதார...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்க இரு வாரங்களுக்கு மேல் ஆகலாம் | சீனா

நூற்றுக்கணக்கான மீற்றர் நிலத்தடியில் சிக்கியுள்ள சுரங்கத் தொழிலாளர்கள் குழுவை மீட்பதற்கு இன்னும் இரண்டு வாரங்களுக்கு மேல் செல்லலாம் என சீன மீட்புக் குழுக்கள் கூறுகின்றன.

முதல் நடிப்பும் அரங்க முன்றிலும் | பால சுகுமார்

சொல்ல வல்லாயோ நீ-1 சங்ககால மரபில் முன்றில்கள் அரங்குகளாக ஆடு களமாக இருந்தன நாம் சங்கப் பாடல்கள் தரும் செய்திகளில்...

டோக்கியோ ஒலிம்பிக் இரத்து செய்யப்படுவதாக வெளியான செய்தி நிராகரிப்பு

டோக்கியோ ஒலிம்பிக் இரத்து செய்யப்படுவதாக வெளியான செய்திகளை ஜப்பானிய அரசாங்கம் இன்று மறுத்துள்ளது. இது தொடர்பில் ஜப்பானின் துணை தலைமை...

மேலும் பதிவுகள்

தனுஷுடன் மூன்றாவது முறையாக இணையும் பிரபல நடிகை

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷுடன் பிரபல நடிகை மூன்றாவது முறையாக இணைய இருக்கிறார்.தனுஷ்நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவர் தற்போது கார்த்திக்...

டிஜிட்டல் முறையில் மொய் பணம் வசூலிப்பு | திருமண விழாவில் அசத்திய மணமக்கள்

திருமண அழைப்பிதழில் அச்சடிக்கப்பட்ட கியூ.ஆர்.கோட்டினை பயன்படுத்தி உறவினர்கள் பெரும்பாலும் தங்களது செல்போன் மூலமே மொய் பணத்தை எழுதினர்.திருமண அழைப்பிதழ்மதுரை: தென் மாவட்டங்களில் குறிப்பாக மதுரையில் மொய்...

குருந்தூர் மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் வெளிப்படையான இன அழிப்பு | ஸ்ரீதரன்

முல்லைத்தீவு – குருந்தூர் மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் நாடாளுமன்றின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்க இரு வாரங்களுக்கு மேல் ஆகலாம் | சீனா

நூற்றுக்கணக்கான மீற்றர் நிலத்தடியில் சிக்கியுள்ள சுரங்கத் தொழிலாளர்கள் குழுவை மீட்பதற்கு இன்னும் இரண்டு வாரங்களுக்கு மேல் செல்லலாம் என சீன மீட்புக் குழுக்கள் கூறுகின்றன.

இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் எதிர்ப்பு போராட்டம்!

தமிழக மீனவர்களின் பல இலட்சம் மதிப்பிலான விசைப்படகுகளை அரசுடமையாக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கச்சத்தீவு ஒப்பந்தத்தை இலங்கை அரசு மீறுவதை கண்டித்தும் ராமேஸ்வரம் மீனவர்களின் விசைப்படகுகளில் கறுப்புக் கொடி ஏற்றி போராட்டமொன்றை...

உரிமைகளுக்கும் கண்ணியத்திற்கும் மதிப்பளிக்க வேண்டும் என்கிறது அமெரிக்கா

கொரோனா தொற்றினால்  உயிரிழப்போர் விடயத்தைப் பொறுத்தவரையில், சர்வதேச சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களின்படி ஒவ்வொருவரும் அவர்களது நம்பிக்கையைக் கடைப்பிடிப்பதற்கு அனுமதிக்க வேண்டும். அதனூடாக அவர்களின் உரிமைகளுக்கும்...

பிந்திய செய்திகள்

துயர் பகிர்வு