செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை ஏற்பது குறித்து இலங்கையின் தீர்மானம்!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை ஏற்பது குறித்து இலங்கையின் தீர்மானம்!

0 minutes read

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை இலங்கை ஏற்குமா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என அமைச்சரவை இணை செய்தித் தொடர்பாளரும் ஊடக அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

மேலும் இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளிவிவகார அமைச்சகத்தை முடிவு செய்ய உத்தரவிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஆப்கானிஸ்தானின் முன்னேற்றங்களை இலங்கை பின்பற்றி வருகிறது என்றும் அவர் கூறினார்.

SARRC பிராந்தியத்தில் உள்ள நாடு என்பதால் ஆப்கானிஸ்தானின் நிலைமையை இலங்கை கவனத்தில் எடுத்துள்ளது என்றும் டலஸ் அழகப்பெரும கூறினார்.

தலிபான்கள் தலைமையில் ஆப்கானிஸ்தானில் உருவாகும் அரசாங்கம் குறித்து இலங்கையின் நிலைப்பாட்டை வெளிவிவகார அமைச்சு விவாதித்து அறிவிக்கும் என்று அமைச்சர் கூறினார்.

இதேநேரம், ஆப்கானிஸ்தான் மக்கள் நாட்டைவிட்டு வெளியேற முயன்று வருவதால் இலங்கை வருத்தமடைவதாகவும் அவர் கூறினார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.