இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அஜித் நிவாட் கப்ரால் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
அவர் இன்று முற்பகல் தனது நியமன கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய வங்கியின் 16வது ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அஜித் நிவாட் கப்ரால் இன்று (புதன்கிழமை) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் மத்திய வங்கியின் ஆளுநராக அஜித் நிவாட் கப்ராலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்திருந்தார்.
தற்போதைய அரசாங்கத்தில் நிதி இராஜங்க அமைச்சராக இருந்த அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்திருந்தார்.
அதே நேரம், மத்திய வங்கியின் ஆளுநராக பதவி வகித்திருந்த பேராசிரியர் டபிள்யு.டி.லக்ஷ்மன், நேற்று குறித்த பதவியிலிருந்து விலகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.