பிரியந்த குமாரவின் குடும்பத்தின் நலனுக்காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது!

சியல்கோட்டில் உயிரிழந்த இலங்கையரின் குடும்பத்தின் எதிர்காலத்திற்கு தேவையான நடவடிக்கையை எடுத்துவருவதாக அரசாங்கம் கூறியுள்ளது.

அதன்படி பிரியந்த குமாரவின் பிள்ளைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் எதிர்காலத்திற்காக பாகிஸ்தான் அரசாங்கத்துடன் இலங்கை அரசாங்கம் தொடர்ந்து செயற்படும் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், குறித்த நபரின் குடும்ப உறுப்பினர்களின் எதிர்கால நலனுக்காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக தெரிவித்தார்.

அத்தோடு இழப்பீடுகளை பெற்றுக்கொள்வது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக பாகிஸ்தான் அரசாங்கத்துடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் அவர் கூறினார்.

மேலும் சம்பவம் தொடர்பான விசாரணைகள் குறித்த நாளாந்தம் தெரியப்படுத்துவதாக பாகிஸ்தான் அரசாங்கம் உறுதியளித்துள்ளது என்றும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.

ஆசிரியர்