Tuesday, March 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை புதுக்குடியிருப்பு பொலிஸாரின் திட்டமிட்ட செயற்பாட்டினை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம்

புதுக்குடியிருப்பு பொலிஸாரின் திட்டமிட்ட செயற்பாட்டினை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம்

3 minutes read

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளருக்கு  அபகீர்த்தி ஏற்படுத்தியதற்கு எதிராக முல்லைத்தீவு மாவட்டத்தில் பல பகுதிகளிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கடந்த 30 ஆம் திகதி இரவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் எரிபொருள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அதனை பொலிஸார் சுற்றிவளைத்தனர் மற்றும் முற்றுகை என்ற கருத்துப்பட செய்திகள் வெளிவந்தன. 

இந்த சம்பவத்தினை புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் முல்லைத்தீவு மாவட்ட  அரசாங்க அதிபருக்கு உடனடியாக தெரியப்படுத்தினார். 

இதன்போது  அரசாங்க அதிபர் குறிப்பிட்டார் மக்களுக்கு தெளிவு படுத்தவும் மற்றும் வெளிப்படைத் தன்மையினை பேணுவதற்காகவும் பொரிஸாக்கு அலுவலகத்தை திறந்து காண்பிக்குமாறு வலியுறுத்தினார். 

அரசாங்க அதிபரின் பணிப்புரைக்கு அமைய அலுவகம் பொலிஸாக்கு திறந்து காண்பிக்கப்பட்டது.  இதில் அலுவலகத்தில் இருந்து மண்ணெண்ணை 4.5 லீட்டர், டீவல் 50 லீட்டர் பொலிஸாரினால் எடுக்கப்பட்டது. 

இதில் 4.5 லீட்டர் மண்ணெண்ணை புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் கிராமத்துக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்கு நீர் இறைக்கும் இயந்திரத்துக்கு பயன்படுத்துவதற்கானது. எடுத்துக்கொள்ளப்பட்ட 50 லீட்டர் டீசலானது தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக திடீர் என்று எரிபொருள் தட்டுப்பாடு அலுவலகத்திற்கு ஏற்படுமாயின் அதற்கான பாவைனைக்கானது. 

இதன் பின்னர் பிரதேச செயலாளருக்கு ஒதுக்கப்பட்ட விடுதியில் சோதனை நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டனர். இதன்போது விடுதியில் இருந்து 5 லீட்டர் மண்ணெண்ணை,  10  லீட்டர் பெற்றோல் இருந்துள்ளது அதனையும் பொலிஸார் எடுத்துச் சென்றுள்ளனர். 

விடுதியில் இருந்த 5 லீட்டர் மண்ணெண்ணை பிரதேச செயலாளரின் அன்றாட  சமையல் மற்றும் மின்சாரம் துண்டிப்பு நேரங்களில் விளக்குக்காக பயன்படுத்தப்படுவதாகும்.   விடுதியில் இருந்த 10 லீட்டர் பெற்றோல் சாதாரண மக்கள் பெற்றுக் கொள்வது போல் பெற்றுக் கொள்ளப்பட்டதாகும். 

பிரதேச செயலாளரின் மோட்டார் சைக்கிளுக்கு பயன்படுத்துவதற்கானது. காரணம் பிரதேச செயலாளரின் குடும்பம் யாழ்ப்பாணத்தில் என்பதால் தீடீர் என்று பிள்ளைகளுக்கு ஏதும் அவசரம் , வீட்டில் ஏதும் அவசர தேவையிருப்பின் சென்றுவருவதற்கானது.  இவற்றையும் பொலிஸார் எடுத்துச் சென்றுள்ளனர். 

பலதடவைகள் பொலிஸாருக்கு பிரதேச செயலாளர் எடுத்துச் சொல்லியும் மேலே குறிப்பிட்ட அனைத்து எரிபொருட்களையும் பொலிஸார் எடுத்துச் சென்றுள்ளனர்.  செல்கின்ற போது பிரதேச செயலாளரின் விடுதியல் பிரதேச செயலாளரினால் வளர்த்த நாயை வாகனத்தால் அடித்து கொலை செய்துவிட்டுச் சென்றனர்.

பொலிஸார் சோதனையிட முன்னர் பிரதேச செயலாளருக்கு தெரிவித்தனர் என்னவென்றால் மக்கள் திரண்டுள்ளனர் மக்களுக்கு சந்தேகம் உண்டு கண்டிப்பாக அலுவலகம் திறந்து காட்டப்பட வேண்டும் என்ற விடப்பிடியில் நின்றனர். பொலிஸாரின் வேண்டு கோள் அரசாங்க அதிபர் மற்றும் மேலதிக அரசாங்க அதிபருக்கு தெரிவிக்கப்பட்டு அவர்களில் பணிப்பில் வெளிப்படைத் தன்மையினைப் பேணும் நோக்கிலும் அலுவலகம் திறந்து காட்டப்பட்டது. 

ஆனால் பொலிஸாரின் தகவலுக்கு மாறாக அங்கு மக்கள் திரளவில்லை , ஒருசில தனிநபர்களும் பொலிஸாரும் , ஊடகவியலாளர்களுமே நின்றனர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

இந்த செயலானது பிரதேச செயலாளரிடம் இருந்த தனிப்பட்ட விருப்பு வெறுப்பு காரணமாக ஒரு சிலரின் உந்துதலுக்கு அமைய பொலிஸார் இவ்வாறான செயலை முன்னெடுத்ததோடு ,  தன்மீது அபகீர்த்தயை ஏற்படுத்துவதற்காக சிலர் முனைவதாகவும் பிரதேச செயலாளர்  அரசாங்க அதிபரிடம் முறையிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தினை ஊடகங்கள் சரியான முறையில் தகவலை உறுதிப்படுத்தாது தகவல் மூலமற்று ஒரு சிலரின் விருப்பு வெறுப்புக்களை திருப்திப் படுத்துவதற்காக செய்தியினை அறிக்கையிட்டுள்ளமை மன வேதனையைத் தருவதாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளமை அனைவரும் அறிந்த விடயம்.

இந்த செயலைக் கண்டித்து ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கு  முன்பாக  அனைத்து உத்தியோகத்தர்களும் இன்றைய தினம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர். 

இதன் போது  பாதிக்கப்பட்ட பிரதேச செயலாளருக்கு நீதி கிடைக்க வேண்டும், ஊடகங்கள் ஊடக தர்மத்துடன் இயங்க மேண்டும் என்ற கோசங்களை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர்  எழுப்பினர். 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More