கிளிநொச்சி வரலாற்றில் இடம்பிடித்த கிளி மரதன்

கிளி பீப்பிள் ஒழுங்கமைப்பில் அபியகத்தின் கிளி மரதன் என்ற மரதன் நிகழ்வு இன்று கிளிநொச்சியின் பொக்கிசங்களில் ஒன்றாக திகழும் இரணைமடு நீர்ப்பாசன குள பிரதேசத்தில் தொடங்கி பரந்தன் வரை இடம்பெற்றது. இதில் சுமார் முந்நூறு வரையான இளைஞர் யுவதிகள் பங்கேற்று சுமார் இருநூறு போட்டியாள ர்கள் தமது ஓட்டத்தை சிறப்பாக நிறைவு செய்திருந்தனர்.

குறித்த போட்டியில் பங்குபற்றியவர்களில், ஆண்கள் பிரிவில் கிளிநொச்சியை சேர்ந்த எஸ்.கீரன் முதல் இடத்தினை பெற்றார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த கே.ஜெயந்தன் இரண்டாம் இடத்தினையும், வவுனியாவை சேர்ந்த எஸ்.கிந்துசன் மூன்றாம் இடத்தி னையும் பெற்றனர். பெண்கள் பிரிவில் வவுனியாவை சேர்ந்த எஸ்.கேமப்பிரியா முதல் இடத்தினை பெற்றுக்கொண்டார். முல்லைத்தீவை சேர்ந்த என்.கேமா இரண்டாம் இடத்தையும் மற்றும் எல்.மேரிவினுசா மூன்றாம் இடத்தினையும் பெற்றனர்.

முதலாம் பரிசாக ரூபா.100,000.00 வும் இரண்டாம் பரிசாக ரூபா 50,000.00 வும் மூன்றாம் பரிசாக ரூபா 25,000.00 வும் ஏனைய ஐந்து இடங்களைப் பெற்றவர்களுக்கு ரூபா 5000.00 வும் மற்றும் சான்றிதழ்களும் போட்டியை நிறைவு செய்த அனைத்து போட்டியாளர்களுக்கு ரூபா 1000.00 வும் ஆண் பெண் இரு பிரிவுகளுக்கும் வழங்கி கெளரவிக்கப் பட்டது.

கிளிநொச்சி மாவட்டத்தில் பல வகையி னரின் ஒத்துழைப்பு முழுமையாக கிடைக்கப்பெற்று இப் போட்டியை சிறப்பாக நிறைவு செய்யக்கூடிய சந்தர்ப்பம் இன்று அமைந்ததையிட்டு ஒழுங்கமைப்பு குழு சார்பில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். வருடாந்தம் நடாத்தப்பட இருக்கின்ற இந்த போட்டியின் ஆரம்பம் கிளிநொச்சி மாவட்டத்தின் வரலாற்று பக்கங்களில் நிச்சயம் இடம்பிடிக்கும்.

ஆசிரியர்