Sunday, April 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அரசாங்க சேவை தொடர்பில் பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

அரசாங்க சேவை தொடர்பில் பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

2 minutes read

வெளிவிவகார அமைச்சின், தூதரக சேவை பிரிவின், சேவைகள் சில மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.

வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றின் மூலம் இதனை அறிவித்துள்ளது.

கணினி கட்டமைப்பில் கோளாறு

வெளிவிவகார அமைச்சின் தூதரக சேவை பிரிவின் கணினி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக, சரிபார்ப்பு மற்றும் சான்றளிப்பு பிரிவுகளின் சேவைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.

அரசாங்க சேவை தொடர்பில் பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு | Notification Of The Ministry Of External Affairs

இதற்கமைய, கொழும்பு 01 இல் உள்ள வெளிவிவகார அமைச்சின் தூதுரக சேவை பிரிவிலும், யாழ்ப்பாணம், திருகோணமலை, கண்டி, மாத்தறை மற்றும் குருநாகல் முதலான பிராந்திய அலுவலகங்களிலும் சரிபார்ப்பு மறறும் சான்றளிப்பு பிரிவுகளின் சேவைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.

கணினி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறை சீராக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதுடன், குறித்த சேவைகள் மீள ஆரமப்பிக்கப்பட்டதும் பொதுமக்களுக்கு அறியப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஏனைய தூதரக சேவைகள் எவ்வித தடையுமின்றி இடம்பெறும் என வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மக்களுக்கான அறிவிப்பு

அரசாங்க சேவை தொடர்பில் பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு | Notification Of The Ministry Of External Affairs

மேலும், ஏனைய சேவை பெறுநர்கள், தங்களின் சேவைகளின் சாத்தியக்கூறுகள் குறித்து அறிந்துகொள்ள தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

கொழும்பு தூதரக சேவைப் பிரிவு 0112 33 88 12 அல்லது 0112 33 88 43

யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகம் – 021 22 15 970

திருகோணமலை பிராந்திய அலுவலகம் – 026 22 23 182

கண்டி பிராந்திய அலுவலகம் – 0812 38 44 10

குருநாகல் பிராந்திய அலுவலகம் – 0372 22 59 41

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More