இனப்படுகொலை இடம்பெறவில்லை | பொன்சேகா

“இலங்கையில் இனப்படுகொலை இடம்பெறவில்லை. 40 ஆயிரம் பேர் கொல்லப்படவும் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

ஜெனிவா விவகாரம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இராணுவக் குறைப்பு செய்யப்பட வேண்டும் என்ற ஜெனிவா யோசனை ஏற்புடைய விடயம் அல்ல. அதனை ஏற்க முடியாது.

படைக் குறைப்பு யோசனை ஏற்புடையது அல்ல.

இனப்படுகொலை இடம்பெறவில்லை! 40 ஆயிரம் பேர் கொல்லப்படவும் இல்லை: பொன்சேகா சொல்கின்றார் | Sri Lanka Final War Genocide Sarath Fonseka

இராணுவப் பலத்தை எண்ணிக்கையுடன் மதிப்பிடக்கூடாது. இராணுவத்துக்கு ஒதுக்கப்படும் நிதியை வைத்துதான் கணக்கிட வேண்டும்.

இலங்கை இராணுவம் இன்னமும் தொழில்நுட்பம் ரீதியில் மேம்படவில்லை. எனவே, படைக் குறைப்பு யோசனை ஏற்புடையது அல்ல.

இலங்கையில் இனப்படுகொலை இடம்பெறவில்லை. 40 ஆயிரம் பேர் கொல்லப்படவும் இல்லை. ஓரிரு சம்பவங்கள் இடம்பெற்றிருக்கலாம்.

அது தொடர்பில் உள்ளக விசாரணை நடத்தலாம். இதனைப் போர் முடிந்த கையோடு செய்யாததாலேயே பிரச்சினை ஏற்பட்டது” – என்றார்.

ஆசிரியர்