21 சதவீதத்தால் குறைந்த சுற்றுலா பயணிகள் | இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை

செப்டெம்பர் மாதத்தில் கடந்த ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும் போது சுற்றுலாப் பயணிகளின் வருகை 21 சதவீதத்தால் குறைந்துள்ளது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை இதனைத் தெரிவித்துள்ளது.

ஓகஸ்ட் மாதத்தில் 47 ஆயிரத்து 293 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குள் வருகைத்த தந்துள்ளனர்.

எனினும், செப்டம்பர் மாதத்தில் 29 ஆயிரத்து 802 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இது இந்த ஆண்டில் இதுவரை பதிவு செய்யப்பட்ட மிகக் குறைந்த வரவு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குளிர்காலத்தில் வலுவான மறுமலர்ச்சிக்கான சுற்றுலாத் துறையின் நம்பிக்கைக்கு இது பின்னடைவை ஏற்படுத்தும் என கவலை வெளியிடப்பட்டுள்ளது.

ஆசிரியர்