இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 5 நாடுகளின் தூதுவர்களுடன் ரணில் பேச்சு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கையிலுள்ள மிக முக்கிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களை நேரில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

அமெரிக்கத் தூதுவர், பிரிட்டன் தூதுவர், இந்தியத் தூதுவர், ஜப்பானியத் தூதுவர் மற்றும் ஆஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

இதன்போது இருதரப்பு அபிவிருத்தி ஒத்துழைப்பு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இராஜதந்திரப் பிரதிநிதிகளுக்கும் இடையில் கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஆசிரியர்