September 22, 2023 3:10 am

அநாவசியமாக வெளியில் வராதீர்கள்! – மக்களிடம் வேண்டுகோள்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

பொதுமக்கள் அநாவசியமாக வெளியில் நடமாடுவதைத் தவிர்ப்பது நல்லது என்று வடக்கு மாகாண மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் ரி.சுபோகரன் இன்று ஊடகங்களிடம் தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

“கடந்த சில நாட்களாக வடக்கு உட்பட இலங்கையின் சில பகுதிகளில் வளியில் தரச் சுட்டெண் சற்று உயர்வாகக் காணப்படுகின்ற அறிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றன. இது சாதாரணமாக வளி மண்டலத்தில் ஏற்படுகின்ற காலநிலை மாற்றத்தின் மூலம் அதாவது காற்றின் வேகம் காற்றின் திசை மற்றும் தாழமுக்க மாற்றத்தின் காரணமாக வளியில் காணப்படும் சில மாசுக்கள் இலங்கையிலே செறிவடையக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

அந்தவகையிலேயே கடந்த சில நாட்களாக, வளித்தட சுட்டெண் இலங்கையில் காணப்படுகின்ற நிறுவனங்களின் அறிக்கையின்படி சற்று அதிகரித்துக் காணப்படுகின்றது.

இவ்வாறு காணப்படுவதால், மக்கள் பொதுவாக அவதானமாக நடமாடுவது நல்லது. அதாவது அநாவசியமாக வெளியில் நடமாடாது, உரிய பாதுகாப்புடன் நடமாடுவது விரும்பத்தக்கது. வெளியில் அநாசியமாக நடமாடுவதைக் குறைத்துக்கொள்வது மிக நல்லது.

அதேநேரம் நேற்று தொடக்கம் மழையுடனான காலநிலை காணப்படுவதால், இந்த வளித்தட சுட்டெண் ஆனது கிடைக்கப்பெற்ற அறிகையின்படி குறைந்து சென்று சாதகமான நிலைக்குச் செல்வதை க் காணக்கூடியதாக உள்ளது. வேகமாகக் குறைவடைந்து சாதாரண ஒரு மட்டத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இது தொடர்பில் மக்கள் பெரிதாக அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. பயப்படவும் தேவையில்லை. ஆனால், நோயாளிகள், வயதில் மூத்தவர்கள், சிறுவர்கள் அவதானமாக நடமாடி, அநாவசியமாக வெளியில் செல்வதைத் தவித்துக் கொள்வது நல்லது.

இது அநேகமாக இன்னும் ஓரிரு தினங்களில் ஒரு சாதாரண நிலையை அடையக்கூடிய வாய்ப்புகள் மிகவும் சாத்தியமாகக் காணப்படுகின்றது” – என்றார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்