Monday, May 6, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஜனவரி 2 முதல் சகல கல்வி வலயங்களிலும் போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டம்

ஜனவரி 2 முதல் சகல கல்வி வலயங்களிலும் போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டம்

2 minutes read

பாடசாலை மாணவர்கள் மத்தியில் தீவிரமடைந்துள்ள போதைப்பொருள் பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஆசிரியர்களுக்கு விசேட பயிற்சியளிக்கப்பட்டுள்ளது. 

அத்தோடு பொலிஸ், சுகாதார அமைச்சு உள்ளிட்ட பல தரப்பினருடன் இணைந்து எதிர்வரும் ஜனவரி 2ஆம் திகதி முதல் சகல கல்வி வலயங்களிலும் போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்கான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கு கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தெளிவுபடுத்தும்போது இதனை தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

178 நச்சுத் தன்மையுடைய போதைப்பொருட்கள் பட்டியல்படுத்தப்பட்டுள்ளன. இவை தொடர்பான சட்டமூலம் கடந்த வாரம் சபாநாயகரினால் சான்றுரைப்படுத்தப்பட்டுள்ளது. 

கடந்த காலங்களில் இவ்வாறான போதைப்பொருட்கள் 4 மாத்திரமே காணப்பட்டன. 

5 கிராம் ஐஸ் போதைப்பொருளை தம்வசம் வைத்திருப்பவர்களுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனையை நீதிமன்றத்தினால் வழங்க முடியும்.

கொழும்பில் 144 பாடசாலைகளில் ஒரு இலட்சத்து 86,000 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். 11,000 ஆசிரியர்கள் உள்ளனர். இவர்களில் 144 ஆசிரியர்களுக்கு போதைப்பொருள் குறித்து மூன்று நாட்கள் பயிற்சி வழங்கப்பட்டது. போதைப்பொருட்களை எவ்வாறு இனங்காண்பது என்பது தொடர்பில் குறித்த பயிற்சி வழங்கப்பட்டது.

மாணவர்களுடன் இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கும்போது மிகவும் பாதுகாப்பாக செயற்பட வேண்டும். 

தெரியாத ஒரு விடயத்தை கற்பிக்க முயற்சிப்பது பொருத்தமற்றது. வைத்தியர்கள் நோயாளர்களை அணுகுவதைப் போன்றே அதிபர்களும் ஆசிரியர்களும் பாடசாலைகளுக்குள் இவ்விடயம் தொடர்பில் மாணவர்களை அணுக வேண்டும்.

நாட்டிலுள்ள கல்வியியற் கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் ஆசிரிய பயிலுநர்களுக்கு மனநலம் குறித்த பயிற்சியும் வழங்கப்படுகிறது. 

எவ்வாறிருப்பினும், இந்த பயிற்சி சகலருக்கும் வழங்கப்படவில்லை. எனவே தான் தற்போது ஆசிரியர்கள் சிலரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கான பயிற்சிகளை வழங்க வேண்டியுள்ளது. 

இவ்வாண்டில் 12,000 அனுபவம் மிக்க சிரேஷ்ட ஆசிரியர்கள் ஓய்வுபெறவுள்ளனர். அவர்களின் இடத்துக்கு பொருத்தமான ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டத்தை 100 கல்வி வலயங்களிலும் நடைமுறைப்படுத்துதல் தொடர்பான கலந்துரையாடல் நாளை மறுதினம் திங்கட்கிழமை (டிச. 19) இடம்பெறவுள்ளது. 

குறித்த ஒரு சர்வதேச அமைப்பு, பொலிஸார், சுகாதார அமைச்சு, மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்கள், சிவில் பொலிஸார், போதைப்பொருள் விழிப்புணர்வு சபை உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் இணைத்து எதிர்வரும் ஜனவரி 2ஆம் திகதி சகல பாடசாலைகளிலும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More