September 22, 2023 1:52 am

விக்கி – மணி இணைந்து தேர்தலை எதிர்கொள்ளத் தீர்மானம்!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியும், யாழ்ப்பாணம் மாநகர சபையின் முன்னாள் மேயர் வி.மணிவண்ணன் தலைமையிலான அணியும் இணைந்து போட்டியிடத் தீர்மானித்துள்ளன.

யாழ்ப்பாணம் கோயில் வீதியில் உள்ள சி.வி.விக்கினேஸ்வரனின் இல்லத்தில் இன்று மாலை இரு தரப்புக்கும் இடையே முக்கிய கலந்துரையாடல் நடைபெற்றது.

இந்தச் சந்திப்பின் பின்னர் ஊடங்களுக்குக் கருத்துத் தொிவித்த சி.வி.விக்னேஸ்வரன்,

“உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மணிவண்ணன் அணியுடன் இணைந்து போட்டியிடுவதற்கு நாங்கள் தீர்மானித்துள்ளோம்” என்று தெரிவித்தார்.

இந்த ஊடக சந்திப்பில் முன்னாள் யாழ். மேயர் வி.மணிவண்ணனும் கலந்துகொண்டார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்