October 4, 2023 4:36 am

தேயிலை மலையிலிருந்து தொழிலாளி சடலமாக மீட்பு!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

பொகவந்தலாவை, பொகவானை தோட்டத்தின் 11ஆம் இலக்க தேயிலை மலையிலிருந்து ஆணொருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

தேயிலை மலைக்குத் தொழிலுக்குச் சென்ற பொகவானை தோட்டத்தைச் சேர்ந்த 78 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான செல்லன் ராமசாமி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காகச் சடலம் கிளங்கள் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொகவந்தலாவைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்