May 28, 2023 5:34 pm

ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து ஐ.தே.கவின் கூட்டங்கள்!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

நாடு பூராகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் 100 தொகுதிக் கூட்டங்களை நடத்துமாறு அக்கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டாரவிடம் அறிவுரை வழங்கியுள்ளார்.

அந்தவகையில்,ஜூலை மாதமளவில் 80 கூட்டங்களை நடத்தி முடிக்க இயலும் என்று ரணிலிடம் பாலித வாக்குறுதி வழங்கியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தொகுதிக் கூட்டங்கள் இப்போது நாடு பூராகவும் இடம்பெற்று வருகின்றன. 2024 இல் இடம்பெறப் போகின்ற ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து ஐக்கிய தேசியக் கட்சியைக் கிராம மட்டத்தில் பலப்படுத்தும் நோக்கிலேயே இந்தக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன என்று கட்சி வட்டாரம் கூறுகின்றது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்