June 5, 2023 11:23 am

கிளிநொச்சி விபத்தில் குடும்பஸ்தர் சாவு! – 2 சிறுவர்கள் காயம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

கிளிநொச்சி – முகமாலைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து இன்று காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் யாழ்ப்பாணம், வடமராட்சி – துன்னாலைப் பகுதியைச் சேர்ந்த நபரே உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த அரச பஸ் ஒன்றுடன், கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்தியவர் உயிரிழந்ததுடன், அதில் பயணித்த அவரின் உறவினர்களான சிறுவர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில் பளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான விசாரணைகளைப் பளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்