September 22, 2023 5:03 am

நுவரெலியாவில் 14 வயது சிறுவன் தூக்கிட்டு உயிர்மாய்ப்பு!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட சிறுவன் ஒருவர் வைத்தியசாலை கொண்டு சென்ற போதும் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நுவரெலியா, லபுக்கலை தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

நுவரெலியா, லபுக்கலை கீழ் பிரிவைச் சேர்ந்த 14 வயதுடைய நடேசன் ஆக்காஷ்ராஜ் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தாயும் தந்தையும் வீட்டில் இல்லாத நேரத்தில் சிறுவன் நேற்று தூக்கிட்டார் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சிறுவனை உடனடியாக மீட்டு நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை கொண்டு சென்ற போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இன்று இடம்பெறவுள்ள உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ள நிலையில் குறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்