December 7, 2023 5:09 pm

கொழும்பில் கூட்டு சோதனை! – 35 பேர் அதிரடியாகக் கைது

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

கொழும்பு – பொரளை பகுதியில் பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து நடத்திய விசேட கூட்டு சோதனை நடவடிக்கையில் குறைந்தது 35 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹெரோயின் வைத்திருந்த இரண்டு சந்தேகநபர்களும், ஐஸ் போதைப்பொருளுடன் நான்கு பேரும், கஞ்சாவுடன் ஆறு சந்தேகநபர்களும் இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், வாள்களை வைத்திருந்த இரண்டு சந்தேகநபர்களும், பிடியாணை நிலுவையில் உள்ள இரண்டு சந்தேகநபர்களும், மேலும் 19 சந்தேகநபர்களும் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில்,ஹெரோயினுடன் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரிடமிருந்து ஹெரோயின் கடத்தல் மூலம் சம்பாதித்ததாகக் கருதப்படும் 26 இலட்சம் ரூபா பணம் மீட்கப்பட்டுள்ளது.

மேலும், ஐஸ் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட ஒருவரிடமிருந்து ஐஸ் போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டியதாகக் கருதப்படும் 2 இலட்சத்து 15 ஆயிரம் ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளின் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்