செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தையும் மகனும் மரணம்!

மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தையும் மகனும் மரணம்!

0 minutes read

வாகன விபத்தில் தந்தையும் மகனும் பரிதாபகரமாகச் சாவடைந்துள்ளனர்.

இந்தச் சோக சம்பவம் மதவாச்சியில் நேற்றிரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

திருகோணமலையைச் சேர்ந்த தந்தையும் மகனும் மோட்டார் சைக்கிளில் பயணித்தபோதே விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி மரமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற ஏ.சில்வெஸ்டர் என்ற 22 வயதுடைய மகன் சம்பவ இடத்திலும், வி.அன்ரனிதாஸ் என்ற 48 வயதுடைய தந்தை வைத்தியசாலையிலும் உயிரிழந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.