Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கை பொலிஸ் நிலையங்களின் வாடகை எவ்வளவு தெரியுமா?

இலங்கை பொலிஸ் நிலையங்களின் வாடகை எவ்வளவு தெரியுமா?

1 minutes read

இலங்கை முழுவதும் வாடகை அடிப்படையில் எடுக்கப்பட்ட கட்டிடங்களில் 121 பொலிஸ் நிலையங்கள் பராமரிக்கப்படுவதாகவும், அதற்காக இலங்கை அரசாங்கம் வருடாந்தம் 11 கோடி ரூபாயை செலவிடுவதாகவும் பொலிஸ் முகாமைத்துவப் பிரிவின் தரவுகளை சுட்டிக்காட்டி, சிங்கள மொழி மூல பத்திரிகை, லங்காதீப செய்தி வெளியிட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் 607 பொலிஸ் நிலையங்கள் உள்ளதாகவும் அவற்றில் 121 பொலிஸ் நிலையங்கள் வாடகை அடிப்படையில் எடுக்கப்பட்ட தனியார் கட்டிடங்களில் இயங்குவதாகவும் அத்தரவுகள் தெரிவிக்கின்றன.

மேல் மாகாணத்தில் தனியார் கட்டிடங்களில் இயங்கும் பொலிஸ் நிலையங்களுக்கு மாதாந்தம் 50 இலட்சம் ரூபாய் வாடகையாக செலவிடப்படுகின்றது.

அத்துடன், வடமாகாண பொலிஸ் நிலையங்களுக்கு 2,94,000 ரூபாயும், கிழக்கு மாகாணத்திலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு 2,33,000 ரூபாயும் வாடகையாக வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், வடமேற்கு மாகாணத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு 07 இலட்சம் ரூபாயும், சப்ரகமுவ மாகாணத்தில் பொலிஸ் நிலையங்களுக்கு 08 இலட்சம் ரூபாயும் மாதாந்த வாடகையாக வழங்கப்படுகின்றது.

இதேவேளை, மத்திய மாகாணத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு 09 இலட்சம் ரூபாயும், ஊவா மாகாணத்தில் பொலிஸ் நிலையங்களுக்கு 05 இலட்சம் ரூபாயும், தென் மாகாணத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு 05 இலட்சம் ரூபாயும் மாதாந்த வாடகைப் பணமாக செலுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More