December 7, 2023 12:59 am

யாழில் திலீபன் நினைவேந்தலுக்குத் தடை கோரி மீண்டும் மனு!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

யாழ்ப்பாணத்தில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்குத் தடை விதிக்கக் கோரி யாழ். பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை யாழ். நீதிவான் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்த நிலையில், நீதிமன்றத்தில் திரும்பவும் தடை கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து வந்த விசேட பொலிஸ் அதிகாரிகளும், சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதிகளும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் இன்று பிரசன்னமாகி இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் திலீபன் நினைவேந்தல் நிகழ்வால் வன்முறை வெடிக்கும் ஆபத்து உள்ளது எனவும், எனவே நினைவேந்தலுக்கு உடனடியாகத் தடை விதிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இது தொடர்பான கட்டளை நாளை வழங்கப்படும் என்று யாழ். நீதிவான் தெரிவித்துள்ளார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்