Thursday, May 9, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைஆய்வுக் கட்டுரை பாலஸ்தீன -ஈழத்தமிழர்களின் போராட்டங்கள் தொடர்புபட்டவை | தமிழ் ஏதிலிகள் பேரவை

பாலஸ்தீன -ஈழத்தமிழர்களின் போராட்டங்கள் தொடர்புபட்டவை | தமிழ் ஏதிலிகள் பேரவை

2 minutes read

இஸ்ரேலின் பாதுகாப்பு என்ற பெயரில் இன்னும் எத்தனை பாலஸ்தீன உயிர்களை பறிக்கப்போகின்றீர்கள் 

குடியேற்ற காலனித்துவ இஸ்ரேலின் போர் இயந்திரங்களினால் மோசமாக தாக்கப்படும் பாலஸ்தீன மக்களிற்கு தமிழ் ஏதிலிகள் பேரவை தனது ஆதரவை வெளியிட்டுள்ளது

ஈழத்தமிழர்கள் நன்கறிந்த இனப்படுகொலை பயங்கரம் காசாவில் இடம்பெறுவதை நாங்கள் அச்சத்துடன் பார்க்கின்றோம் என தெரிவித்துள்ள தமிழ் ஏதிலிகள் பேரவை இலங்கை அரசாங்கத்தின் கரங்களில் தமிழர்கள் 2009 இல் இவ்வாறான  இனப்படுகொலையை சந்தித்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது.

இலங்கையின் வடக்குகிழக்கில் அங்கீகாரிக்கப்படாத தேசத்தை உருவாக்கியிருந்த தமிழ்தேசிய விடுதலை இயக்கத்தை முற்றாக அழிக்கும் நடவடிக்கைகளில் இலங்கை இராணுவம் ஈடுபட்டவேளை 169376 கொல்லப்பட்டனர் என மதிப்பிடப்பட்டுள்ளது என தமிழ் ஏதிலிகள் பேரவை தெரிவித்துள்ளது.

தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்பட்ட நிலையில் இலங்கை இராணுவத்தினர் தமிழர்களிற்கு எதிரான பாரிய அநீதியில் ஈடுபட்டனர் பொதுமக்களையும் பொது இலக்குகளையும் அது இலக்குவைத்தது பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையில் அது பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டது எனவும் தெரிவித்துள்ள தமிழர் அமைப்பு இன்று இஸ்ரேலிற்கு வழங்குவது போல இந்த இனப்படுகொலைக்கு சர்வதேச சமூகம் இராஜதந்திர ஆதரவையும் பொருள் உதவிகளையும்  வழங்கியது எனவும் தெரிவித்துள்ளது.

வெள்ளை பொஸ்பரஸ் குண்டுகள் கொத்துக்குண்டுகள் மனிதாபிமான பகுதிகள் என அனைத்தையும் 2009 இன் ஆரம்பமாதங்களில் இலங்கையின் இனவெறி அரசாங்கம் பயன்படுத்தியது இனவெறி இஸ்ரேலிய அரசாங்கம் தனக்கு ஆதரவளிக்கும் மேற்குலக நாடுகளின் உதவியுடன் இவ்வாறான ஆயுதங்களை பாலஸ்தீன மக்களிற்கு எதிராக பயன்படுத்துவதை நாங்கள் அச்சத்துடன் பார்த்தவண்ணம் உள்ளோம், எனவும் தமிழ் ஏதிலிகள் பேரவை தெரிவித்துள்ளது.

இலங்கையில் தமிழர்களிற்கு எதிரான இனப்படுகொலைகளில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக  அவுஸ்திரேலியா தடைகளை விதிக்கவேண்டும் - தமிழ் ஏதிலிகள் ...

இலங்கையின் அரசியலில் ஆதிக்கம் செலுத்திவரும் சிங்கள பௌத்த பேரினவாதம் பாலஸ்தீனத்தின் சியோனிஸ்ட் குடியேற்ற திட்டம் போன்றதல்ல எனினும்  பல ஒற்றுமைகள் உள்ளன விளைவுகளும் ஒரேமாதிரியானவையாக உள்ளன எனவும் தெரிவித்துள்ள அவுஸ்திரேலியாவின் தமிழ்  ஏதிலிகள் பேரவை ஒரு குழுவின் மீதான தேசிய ஒடுக்குமுறையை அதிகளவு தீவிரவாதமயப்படுத்தப்பட்டவர்களாக மாறிவரும் வலதுசாரி அரசியல்வாதிகள் நிறைந்த மேலாதிக்கவாதிகளின் அரசாங்கம் முன்னெடுக்கின்றது இவர்கள் தங்களின் வெறுக்கத்தக்க செயல்களை மத அடிப்படையில் நியாயப்படுத்துகின்றனர் எனவும் தெரிவித்துள்ளது.

 

1948 முதல் இஸ்ரேலிய அரசாங்கம் பாலஸ்தீனியர்களிற்கு இழைத்த துயரங்களிற்கு இரங்கல் தெரிவிக்கின்றோம், பாலஸ்தீனியர்கள் தற்போது அனுபவிப்பது ஈழத்தமிழர்கள் பகிர்ந்துகொள்ளும் நீடித்த வலி என தெரிவித்துள்ள தமிழர் அமைப்பு 1948 இல் பிரித்தானிய காலனித்துவாதிகள் சிங்கள பேரினவாதிகளிடம் அதிகாரத்தை ஒப்படைத்தவேளை முதல் ஈழத்தமிழர்கள்   இலங்கை அரசாங்கத்திடமிருந்து தொடர்ச்சியான இனபாகுபாடுகளையும் இனப்படுகொலைகளையும் எதிர்கொண்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது.

 

நாங்கள் இலங்கை இஸ்ரேல் அவுஸ்திரேலிய ஆகிய நாடுகள் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களில் வன்முறைகளில் ஈடுபடுவதை பார்க்கின்றோம்,இந்த அரசுகள் பூர்வீக நிலங்களை அபகரிப்பதை சட்ட பூர்வமாக்குகின்றன-சுயநிர்ணய உரிமையை இழந்த மக்களை இனப்படுகொலை செய்ய உதவுகின்றன,எனவும் தமிழர் அமைப்பு தெரிவித்துள்ளது.

 

இஸ்ரேலிற்கான அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் கட்டுக்கடங்காத ஆதவு குறித்து நாங்கள் ஏமாற்றமடைந்துள்ளோம் நாங்கள் எங்கள் கண்ணமுன்னால்  இனப்படுகொலை இடம்பெறுவதை பார்க்கின்றோம் ஒரு முழுசனத்தொகையும் இனச்சுத்திகரிப்பிற்குள்ளாகுவதை பார்க்கின்றோம் இஸ்ரேலியர்களின் பாதுகாப்பு என்ற போர்வையில் இன்னும் எத்தனை பாலஸ்தீனியர்களின் உயிர்களை பறிக்கவேண்டும் எனவும் தமிழர் அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.

மிகவும் துயரம் மிகுந்த இந்த தருணத்தில் நாங்கள் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவை வெளியிடுவதுடன் ஈழத்தமிழர்கள் என்ற வகையில் சுயநிர்ணய உரிமை மற்றும் சுதந்திரத்திற்கான எங்கள் போராட்டங்கள் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்தவை என்பதை அங்கீகரிக்கின்றோம் எனவும் தமிழ் ஏதிலிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

காலனித்துவ வன்முறையிலிருந்து  ஒடுக்கப்பட்ட குழுக்கள் விடுதலையாகாத வரை சுதந்திரமில்லை பாலஸ்தீனத்திற்காக  பல மாநிலங்களில் இடம்பெறும் போராட்டங்களிற்கு தயவு செய்து ஆதரியுங்கள் எனவும் தமிழர் அமைப்பு தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More