செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சனத் நிஷாந்தவுக்கு இரு வாரங்கள் நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்கத் தடை!

சனத் நிஷாந்தவுக்கு இரு வாரங்கள் நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்கத் தடை!

0 minutes read

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான சனத் நிஷாந்த, நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்கு இன்றிலிருந்து இரண்டு வாரங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற நிலையியல் கட்டளையின் பிரகாரம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவால் இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

“இன்று முதல் இரண்டு வாரங்களுக்கு சனத் நிஷாந்தவின் நாடாளுமன்றச் சேவைக் காலத்தை இடைநிறுத்த உத்தரவிடுகின்றேன்” – என்று சபாநாயகர் சபையில் இன்று குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் ஒழுக்கமற்ற விதத்தில் செயற்பட்டதாலேயே அவருக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உரையாற்றும்போது, அவர் முன்னால் சென்று, ஒலிவாங்கியை மடக்கி, ஆவணத்தையும் சனத் நிஷாந்த பறித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More