செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மட்டக்களப்பு சிங்களமயமாக்கலில் வடமுனை நெலுகல்மலையில் புதிய விகாரை கட்டுமானப்பணி

மட்டக்களப்பு சிங்களமயமாக்கலில் வடமுனை நெலுகல்மலையில் புதிய விகாரை கட்டுமானப்பணி

3 minutes read

மட்டக்களப்பை சிங்கள மயமாக்கலின் அடிப்படையில் எல்லைக்கிராமமான கிரான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வடமுனை கிராம சேவகர்பிரில் உள்ள நெலுகல் மலையில் எனப்படுகின்ற மலையில் மாவட்ட இரு இராஜாங்க அமைச்சர்களின் ஆசீர்வாதத்துடன்  நெலுகல்மலை கிறீன் விகாரை எனும் பெயரில் புதிதாக விகாரை கட்டும் பணி திருகோணமலை சோமவதி விகாரை விகாராதிபதி தலைமையில் இடம்பெற்று வருகின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி காரியாலத்தில் கடந்த  புதன்கிழமை (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

திட்டமிட்ட அடிப்படையிலே கிழக்கு  சிங்கள தேசத்துக்குள் படி படியாக  கரைந்து கொண்டிருக்கின்றது  அம்பாறை. திருகோணமலை மாவட்டம் முழுவதுமாக சிங்களதேசத்தின் திட்டமிட்ட அபகரிப்பு உட்பட்டு தமிழ் மக்கள் கையில் இருந்து விடுவிக்கப்படுகின்ற மிகப் பெரிய ஆபத்தான நிலைக்கு போயிருக்கின்றது.

அதன் அடுத்த கட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் இதில் எல்லைப்புற கிராமங்கள் சிங்கள தேசத்தினாலும் பொரும்பான்மை இனத்தவர்களால் குறிவைக்கப்பட்டு எல்லைக்கிராமங்கள் அபகரிக்கும் செயற்பாடுகள் படிபடியாக நடந்தேறிவருகின்றது.

அதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள வடமுனை கிராமசேவகர் பிரிவிலுள்ள நெலுகல் மலையில் எனப்படுகின்ற குடும்பிமலையின் பின்பகுதியான இந்த மலையில் நெலுகல்மலை கிறீன் விகாரை எனும் பெயரில் விகாரை கட்டும் பணியை திருகோணமலை சோமவதி விகாரை விகாராதிபதி தலைமையில் இடம்பெற்று வருகின்றது.

இந்த பகுதியில் பாரிய கட்டிடம் அமைக்கப்பட்டு அதில் இருந்துகொண்டு கட்டுமானப்பணியில் மேசனாக  இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன்நோக்கம் கிழக்கு மாகாணத்தை முற்றுமுழுதாக சிங்கள பௌத்த தேசத்துக்குள் கரைப்பதற்கான நடவடிக்கையபக பார்க்கின்றோம் வடக்கில் குறுந்தூர்மலை வெடுக்குநாறிமலை, கையகப்படுத்தப்பட்டுள்ள இந்த வேளையிலே கிழக்கு மண் சத்தம் இல்லாமல் பறிபோய் கொண்டிருக்கின்றது

மயிலத்தமடு மேச்சல்தரையில் ரவுண்டப் எனும் புல்லுக்கு அடிக்கும் மருந்தையடித்து மேச்சல் புல்தரைகள் அழிக்கப்பட்டு 8 ஆயிரத்துக்கு மேற்பட்ட மேச்சல் தரை காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளது  அதேவேளை மகாவலி ஏ வலயத்துக்குரிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு பொரும்பான்மை இனத்தவர்களை குடியேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதேவேளை பண்ணையாளர்களை தொடர்ந்து அச்சுறுத்தி அங்கிருந்து அவர்களை வெளியேற்றுகின்ற நடவடிக்கைகள் கட்சிதமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றது இந்த நடவடிக்கைகளுக்கு யார் காரணம் என்பதை மக்கள் மிகத் தெளிவாக விளங்கி கொள்ள வேண்டும்.

இந்த மாவட்டத்தில் 2 இராஜாங்க அமைச்சர்கள் இருக்கின்றனர் இவர்களுடைய பணி சிங்கள தேசத்தினுடைய நிகழ்சி நிரலை அமுல்படுத்துவதுதான் இவர்களது நோக்கமாக இருக்கின்றதே தவிர மட்டக்களப்பு மாவட்டமக்களை பாதுகாக்க எந்தவொரு முன்னேற்றகரவமான செயற்பாடுகளை செய்யவில்லை.

குறிப்பாக மேச்சல்தரை பகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் போக முடியாத சூழ்நிலை காணப்பட்டது அதனை எமது கட்சி தலைவர் நா.உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அந்த இடத்துக்கு சென்று அந்த பகுதிக்கு நா.உறுப்பினர் கூட செல்லமுடியாது என்பதை சர்வதேசத்துக்கு அம்பலப்படு த்தியிருந்தார்.

இந்த நிலையில் கஜேந்திரகுமார் ஏன் இங்கு வரவேண்டும் என பிள்ளையான் நேற்றைய கூட்டத்தில் தெரிவித்திருந்தார் எனவே கஜேந்திரகுமார்; இந்த இடத்துக்கு வரவேண்டியதாக இருந்தது நீங்கள் ஒரு காட்டிக் கொடுப்பை செய்து தமிழ் மக்;களை அழிக்கின்ற செயற்பாட்டில் நின்றதனால் அந்த மக்கள் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளை கூப்பிடவேண்டிய அபாய நிலைக்கு இட்டுச் சென்றீர்கள் எனவே அது ஒரு வெக்க கேடான விடையம்.

இவரின் செயற்பாடுகளை பார்த்தால் தெரியும் தங்களது பக்கற்றுக்களை நிரப்புகின்ற விதமாக தங்களின் அமைச்சுக்கு ஊடாக கிடைக்கின்ற வீதிகளை அமைத்து அதில் 15 வீதம் தரகு பணம் பெற்றுக் கொண்டு அதற்கு வக்காளத்து வாங்குகின்ற ஒப்பந்தகாரர்களை  பின்னால் வைத்துக்கொண்டு தான் பேச  ஒப்பந்த காரர்கள் கையடிக்கின்ற செயற்பாட்டை மிக கடசிதமாக பிள்ளையான் செய்துவருகின்றார்.

எனவே மட்டக்களப்பு  மக்கள் புத்திசாதுரியமாக சிந்திக்கவேண்டிய காலம் இது வருப்போகும் தேர்தல் மாவட்டத்தில் மேலும் ஒரு அரசியல் அடிமை நெருக்கடிக்குள் தள்ளபப் போகின்றது. எனவே வருகின்ற தேர்தலில் தமிழ் தேசியத்துடன் உள்ள தமிழ் தரப்புக்களை பலப்படுத்தவேண்டுமே தவிர மாறாக அரசுடன் நிற்கின்றவர்களுக்கு வாக்குரிமையை அளிப்பீர்களாக இருந்தால் மட்டக்களப்பில் மிங்சி இருக்கின்ற கொஞ்ச காணிகளும் பறிபோகி மக்களுடைய எதிர்காலம் கேள்விக்குறியாக அமைந்துவிடும்.

இந்த விகாரை கட்டும் விடையம் இரண்டு இராஜாங்க அமைச்சர்களுக்கும் தெரியாமல் நடக்க வாய்ப்பு இல்லை இவர்களின் நிகழ்சி நிரல் அடிப்படையில் இவர்களுக்கு தெரிந்துதான் நடக்கின்றது இதனை தெரியப்படுத்தினால் தங்களுக்க மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்ற பயத்தினால் தெரியப்படுத்தாமல் அரசின் நிகழ்சி நிரலை இவர்கள் செய்கின்றனர்.

அதற்காக போடுகின்ற பிச்சைகளான எலும்பு துண்டுகளுக்குதான் இவர்கள் அலைகின்றனரே தவிர  தமிழ் மக்களின் பிரச்சனைக்கு முகம் கொண்டு கிழக்கை மீட்கின்றோம் என போலித்தனமான கதைகளை மக்களுக்கு சொல்லி இனப்படுகொலை செய்த படுகொலை செய்தவர் மக்கள் மத்தியில் பூமாலைகள் தரித்துக் கொண்டு திரிவது எங்களுடைய படித்த சமூகத்திற்கோ உண்மையான தமிழ் உணர்வுள்ள மக்களுக்கு தெரிந்திருக்கும் அதற்கான பதிலடியயை எதிகாலத்தில் மக்கள் கொடுப்பார்கள் என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More