Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்த தன்னார்வலர்களுக்கு பாராட்டு விழா!

கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்த தன்னார்வலர்களுக்கு பாராட்டு விழா!

2 minutes read

புதுச்சேரி முதல்வர்  பங்கேற்கிறார்!

–      பி.எஸ்.ஐ.கனி

புதுச்சேரி : கடந்த ஆண்டில் கொரோனா வேகமாக பரவிய சமயத்தில்,  சென்னையைச் சேர்ந்த ஒருவர் புதுச்சேரி வந்த நிலையில் மரணமடைந்தார். அவரை பரிசோதித்தபோது அவர் கொரோனா தொற்றால் இறந்தது உறுதியானது. இதையடுத்து அவரது உடலை பஞ்சாயத்து மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள் சவக்குழியில் வீசிச் சென்ற சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிருப்தியை மக்களிடையே ஏற்படுத்தியது.

இந்நிலையில், கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டின் பல்வேறு பகுதிகளில்  தேவையுடைய மக்களுக்கு கல்வி உதவி, இரத்த தான உதவி, மருத்துவ உதவி, ஆம்புலன்ஸ் சேவை,  சுனாமி, புயல்,வெள்ளம் உள்ளிட்ட  பேரிடர்களின் போது நிவாரண உதவி என பல்வேறு சமூக பணிகளில்  சாதி மதம்  பாராமல் ஈடுபட்டு வருகின்ற பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பின்  உறுப்பினர்கள், கொரோனா தொற்றால் இறப்போரின் உடலை அவரவர் மத அடிப்படையில் அரசுடன் இணைந்து இறுதிக் காரியங்களைச் செய்ய முன்வந்தனர். அவர்களுக்கு புதுச்சேரி அரசு அனுமதிக் கடிதமும் தந்தது.

இதனையடுத்து பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பை சார்ந்தவர்கள் கொரோனா காலகட்டத்தில்  இறந்த ஆதரவற்ற மற்றும் ஏழைகளுக்கு ஆம்புலன்ஸில் சென்று இலவச சேவை செய்தனர். மேலும் இறந்தவர்களுக்கு இறுதி சடங்கு செய்ய உறவினர்கள் அஞ்சிய நிலையில் துணிவுடன் அவரவர் சமய வழிமுறைப்படி இறுதிச்சடங்குகளை செய்தனர். இவ்வாறு தன்னார்வத்துடன் உடல் அடக்கம் செய்யும் பணிகளில் ஈடுபட்ட தன்னார்வலர்களை கௌரவப்படுத்தும் வகையில் எதிர்வரும் 20.01.2021 அன்று புதுச்சேரியில் பாராட்டு விழா நடைபெறுகிறது. இவ்விழாவில் மாநில தலைவர் முஹம்மது சேக் அன்சாரி, பொதுச்செயலாளர் முஹைதீன் அப்துல் காதர் ஆகியோர்  தன்ன்னார்வ தொண்டு புரிந்தோருக்கு விருதுகளை வழங்கி கௌரவிக்கின்றனர்.

மேலும் இந்த விழாவிற்கு புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி, முதலமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ, திமுக தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ, மக்கள் உரிமை கூட்டமைப்பு மாநில செயலாளர் கோ.சுகுமாரன், எஸ்.டி.பி.ஐ கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் தமீம் கனி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்கின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More