December 11, 2023 1:23 am

இஸ்ரேலுக்கு உதவும் அமெரிக்க டிரோன் விமானங்கள்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

காஸா மீது ஆளில்லா டிரோன் விமானங்கள் பறந்துவருவதாக  குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் அமெரிக்க ராணுவம் ஹமாஸ் வசமுள்ள பிணை கைதிகளை கண்டுபிடிக்க MQ-9 Reaper டிரோன்களை பயன்படுத்திவருவதாகதெரிவித்துள்ளது.

மணிக்கு 440km வேகத்தில் செல்லும் இந்த டிரோன் விமானத்தால் தொடர்ந்து 27 மணி நேரம் வானில் பறந்தபடி ஏவுகணை தாக்குதல் நிகழ்த்தக்கூடிய வல்லமை படைத்தது.

அதிலுள்ள அதிநவீன தெர்மல் சென்சார் கேமராக்கள் மூலம் 25 ஆயிரம் அடி உயரத்திலிருந்தபடி மனித உடலின் வெப்பத்தை வைத்து பிணை கைதிகளின் இருப்பிடத்தை கண்டுபிடித்து இஸ்ரேல் ராணுவத்திற்கு தகவல் அளிக்கும் என கூறப்படுகிறது.

ஒரு மணி நேரம் போர் விமானங்களை இயக்க ஆறரை லட்ச ரூபாய் செலவாகும் நிலையில், பாதி செலவில் இவற்றை இயக்கிவிடலாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்