பீப் பிரியாணியை கடையில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே எளிய முறையில் குக்கரில் பீப் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க…
தேவையான பொருட்கள் :
பீப் (மாட்டுக்கறி)- 1 கிலோ பாசுமதி அரிசி – 1/2 கிலோ
எண்ணெய் – 500 ml
நெய் – 1/4 கப்
பிரியாணி இலை – 2
பட்டை – 2
ஏலக்காய் – 2
லவங்கம் – 2
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 3
இஞ்சி பூண்டு விழுது – 4 ஸ்பூன்
கடைந்த தயிர் – 1 கப்
மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன்
உப்பு – 2 ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
பிரியாணி மசாலா – 2 ஸ்பூன்
புதினா – 1 கைப்பிடி
கொத்தமல்லி – 1 கைப்பிடி
லெமன் – 1
செய்முறை :
குக்கரில் நன்றாக கழுவிய பீப் போட்டு அத்துடன் மஞ்சள்தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு பிறகு தண்ணீர் ஊற்றி மூடி வைத்து 6 விசில் விட்டு இறக்கி தனியாக வைத்துக் கொள்ளவும்.
தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய், நெய், விட்டு பிரியாணி இலை, பட்டை, ஏலக்காய், லவங்கம் சேர்த்து தாளித்த பின்னர் நறுக்கின வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.
இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளி போட்டு வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கியதும் வேக வைத்த பீப் போட வேண்டும்.
அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், பிரியாணி மசாலா தூள் போட்டு வதக்கவும்.
பின்னர் தயிர், லெமன், புதினா, கொத்தமல்லி, போட்டு நன்கு வதக்கவும்.
பிறகு 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
பாசுமதி அரிசியை நன்றாக கழுவி 5 நிமிடம் ஊற வைக்கவேண்டும். பின் அரிசி போட வேண்டும். குக்கரை மூடி வைத்து 1 விசில் விட்டு 10 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து இறக்க வேண்டும்.
இப்போது சூப்பரான பீப் பிரியாணி ரெடி.
நன்றி | மாலை மலர்