சங்ககாலத்தில் உழுவை மீன் , களவன் எனும் நண்டு, நத்தை, அயிரை மீன்கள் போன்ற உயிரினங்கள் வயல் நிலத்திலேயே நிறைந்து வாழ்ந்தன என்றும் வயலில் அல்லி மலர் கூட பூக்கும் அளவுக்கு மருதம் செழித்திருந்தது என்பதை இங்கு உற்று நோக்கலாம்.
மருத நிலம்
மருத நிலத்தின்
கருப்பொருட்களான பறவைகள், கொக்கு, நாரை, குருகு, வாத்து, அன்றில் போன்றன என்று தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். அதே போல தாமரை, கழுநீர், குவளை அல்லி, கழுதி போன்றவை மருத நிலத்திற்கான மலர்களாக குறிப்பிடுகின்றார். களவன் நண்டு, வாளை மீன்,வாகை மீன், கெண்டை மீன், ஆமை, உழுவை மீன், நத்தை போன்ற உயிரினங்களும் அங்கு வாழும் என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.
அகநானூறு 46
“சேற்று நிலை முனைஇய செங்கட்காரன்”
என்று தொடங்கும் பாடலை அள்ளூர் நன்முல்லையார் பாடுகின்றார். எருமை சேற்றிலே கிடக்க விரும்பி ஊரே உறங்கும் வேளையில் தன்னைக் கட்டி இருந்த கயிற்றை அறுத்துக் கொண்டு முள் வேலியைத் தன் கொம்புகளால் விலக்கிக் கொண்டு வயல் நிலத்துப் பழஞ்சேற்றில் இறங்கும் அப்போது அங்குள்ள மீன்கள் ஓடும் என்கின்றார்.
குறுந்தொகை 8குறுந்தொகை 8
ஆலங்குடி வாங்கனார் என்பவர் பாடுகின்றார்.
“கழனி மாத்து விளைந்துகு தீம்பழம் பழன வாளை கதூஉம் ஊரன்” என்று வரும் பாடலில் வயலின் ஓரம் உள்ள மாமரத்தில் கனிந்து விழும் இனிய பழத்தை மருத நிலத்தில் உள்ள வாளை மீன்கள் கவ்வி உண்ணும் ஊரை உடைய தலைவன் இவன் என்று பாடுகிறார்.
களவன் பத்துகளவன் பத்து
இந்த களவன் பத்து என்பது ஐங்குறுநூற்றில் வரும் பத்து பாடல்கள் ஆகும். தலைவன் ஊர் நண்டு இப்படி எல்லாம் விளையாடும் என்று இந்த பத்து பாடல்களிலும் களவன் நண்டு பற்றி ஐங்குறுநூறில் பாடப் பட்டிருக்கின்றது. “புயல் புறந்தத்த புனித்து வளர் பைங்காய் வயலை செங்கொடி களவன் அறுக்கும்”
காய் காய்க்கும் செந்நிற வயலைக் கொடியை வயல் நண்டு அறுத்து விடும் என்று பாடுகின்றார்.
குறுந்தொகை 178
நெடும்பல்லியத்தையர் என்னும் பெண் புலவர் “அயிரை பரந்த அம் தண் பழனத்து” என்னும் பாடலில் அயிரை மீன் வயலில் மேயும் என்று கூறுகின்றார்.
பல உயிரினங்களைக் கொண்டு நமது மருத நிலம் செழித்து இருந்தது என்பது இந்த வரலாற்று பாடல்கள் ஊடாகக் கண்கூடாகக் தெரிகிறது.
இப்போது வேதியுப்புக்கள், பூச்சி கொல்லி மருந்துகளால் இந்த களவன் எனும் நண்டுகளோ அல்லது உழுவை மீன்களோ அயிரை மீன்களோ மிகவும் அருகியே எமது வயல் நிலங்களில் காணப்படுகின்றன. கொக்கு நாரை போன்ற பறவைகளைக் கூட நாங்கள் எப்பொழுதும் காண்பதில்லை.
சிறிய வயதில் நாம் வயல்களுக்குள் நடந்தால் நண்டுகளை காண்போம். நண்டுகள் எமது கால்களில் தட்டுப்பட்டுக் குறுகுறுக்கும். ஆனால் இப்பொழுது மிகவும் குறைந்தே காணப்படுகின்றன என்பது மிகவும் வேதனைக்குரிய விடயம். அதற்காகத்தான் நம்மாழ்வாரும் இயற்கை விவசாயத்தைப் பின்பற்றவேண்டும் என்று வலியுறுத்திக் கூறுவார்.
இப்பொழுது வயல்களுக்கு அருகில் இருக்கும் எமது கிணறுகளின் தண்ணீர் கூட நிறம் மாறி அன்றாடத் தேவைகளுக்குப் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கின்றது என்பது மனதில் வலிக்கும் விடையமாக நமது நாட்டில் இருக்கின்றது.
ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 14 | வரதட்சணை கொடுத்த ஆண்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 13 | சங்க காலத்தில் தந்தையர் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 12 | சங்க காலத்தில் தமிழரின் உணவு முறை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 11 | சங்க இலக்கியத்தில் போருக்கு எதிரான குரல் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 10 | சங்க இலக்கியத்தில் பெண்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 9 | மானம் மிக்க வீரம் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 8 | சங்க இலக்கியத்தில் தைத்திங்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 7 | சங்க இலக்கியத்தில் ‘ஈழம்’ | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 6 | தமிழரின் பெற்காலத்தைப் பேசும் ‘பட்டினப்பாலை’ | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 05 | சிறுபாணாற்றுப் படையின் சிறப்புகள் |ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 04 | திருமண நிகழ்வும் விருந்தும் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 03 | போரின் அறநெறி | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்கப் பதிவுகள் 02: ஏழு அடிகள் விருந்தினர் பின்சென்று வழியனுப்பும் பண்பு: ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 01 கார்த்திகைத் தீபத் திருவிழாவும் செங்காந்தள் பூவும் | ஜெயஸ்ரீ சதானந்தன்