சுமார் 22 வாரங்களில் பிறந்த கனடாவைச் சேர்ந்த சகோதரனும் சகோதரியும் உலகின் மிகவும் முற்கூட்டிய இரட்டையர்களாக கின்னஸ் நிறுவனத்தால் பெயரிடப்பட்டுள்ளனர்.
பொதுவாக ஒரு முழுமையான கர்ப்பம் 40 வாரங்கள் ஆகும். எனினும், இந்த இரட்டையர்கள் 18 வாரங்களுக்கு முற்கூட்டியே பிறந்துள்ளனர்.
ஆதியா மற்றும் அட்ரியல் நடராஜா ஆகியோரே இவ்வாறு 126 நாட்களில் பிறந்துள்ளனர்.
இவர்கள், 2018ஆம் ஆண்டில் அமெரிக்காவின் அயோவா மாநிலத்தில் இரட்டையர்களால் முன்னெடுக்கப்பட்டிருந்த கின்னஸ் சாதனையை இதன்மூலம் முறியடித்துள்ளனர்.
இந்த இரட்டையர்களின் தாயார் ஷகினா ராஜேந்திரம் கூறுகையில், தனக்கு 21 வாரங்கள் மற்றும் 5 நாட்களில் பிரசவம் நடந்தபோது, ” பிரசவம் சாத்தியமாக இல்லை” என்றும் “குழந்தைகள் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் 0%” இருப்பதாகவும் மருத்துவர்கள் தன்னிடம் தெரிவித்ததாக அவர் கூறினார்.
மேலும், ஒன்டாரியோவில் உள்ள அவர்களது வீட்டுக்கு அருகில் உள்ள அதே மருத்துவமனையில், சில மாதங்களுக்கு முன்பு எதிர்பாராத விதமாக தனக்கு முதல்முறையாக கருச் சிதைவு ஏற்பட்டதாகவும் இது தனது இரண்டாவது கர்ப்பம் எனவும் அவர் கூறினார்.