மேற்கு ஜெர்மனியின் டுசெல்டார்ஃப் (Duesseldorf) நகரிலிருந்து சுமார் 13,000 குடியிருப்பாளர்கள் தற்காலிகமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அங்கு 2ஆம் உலகப் போரின் போது கைவிடப்பட்டதாக நம்பப்படும் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகத் தீயணைப்புத் துறை வீரர்கள் தெரிவித்தனர்.
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஒரு டன் எடையிலான அந்த வெடிகுண்டு, இரவோடு இரவாகச் செயலிழக்கச் செய்யப்படும் என்று தீயணைப்புத் துறை கூறியது.
2ஆம் உலகப் போர் முடிந்து 78 ஆண்டுகள் ஆகும் நிலையில் ஜெர்மனியிலுள்ள பல நகரங்களில் கட்டுமானப் பகுதியிலிருந்து இன்னும் வெடிக்காத குண்டுகள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன.
2017ஆம் ஆண்டு பிராங்ஃபர்ட்டில் (Frankfurt) 1.4 டன் எடையில் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டதை அடுத்துச் சுமார் 65,000 மக்கள் இடம் மாற்றப்பட்டனர்.
2021இல் மியூனிக் (Munich) நிலையம் அருகேயுள்ள கட்டுமானப் பகுதியில் 2ஆம் உலகப் போரில் கைவிடப்பட்ட குண்டு வெடித்ததில் 4 பேர் காயமுற்றனர். ரயில் சேவைகளும் தடைப்பட்டன.
மூலம் : AFP