அமெரிக்காவில் நிரந்தரமாக தங்கி பணிபுரிய விரும்புகிற பிற நாட்டினருக்கு ‘கிரீன் கார்டு’ எனப்படும் குடியுரிமை வழங்கப்படுகிறது.
3 ஆண்டு காலம் அந்நாட்டில் தங்கி வேலை செய்ய விரும்புகிற வெளிநாட்டினருக்கு ‘H-1B’ விசா தரப்படுகிறது. இந்த ‘H-1B’ விசா மேலும் 3 ஆண்டுகளுக்கு நீடிக்கத்தக்கது.
‘H-1B’ விசாதாரர்களில் மிகவும் திறமையும், தகுதியும் வாய்ந்த 7% பேருக்குத்தான் நிரந்தரமாக தங்கி வேலை செய்ய வசதியாக ‘கிரீன் கார்டு’ தரப்படுகிறது.
அதுவும் விண்ணப்ப மூப்பு அடிப்படையில் தரப்படுவதால், ‘கிரீன் கார்டு’க்காக ஆண்டுக்கணக்கில் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.