செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா தமிழகம் இரண்டாகப் பிரியும்: சீமான்

தமிழகம் இரண்டாகப் பிரியும்: சீமான்

0 minutes read

காஷ்மீரைப்போல் தமிழகத்தையும் இரண்டாகப் பிரிப்பதற்கான சாத்தியம் காணப்படுவதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரிக்கலாம். ஆனால் இவர்களின் திட்டம் காஷ்மீரை போல் தமிழகத்தையும் இரண்டாக பிரிக்கும் வகையில் காணப்படுகின்றது. பா.ஜ.க அரசை பொறுத்தவரையில் சாதி கட்சிகளை அதிகமாக நம்பும் கொள்கை காண்படுகிறது.

இதனால் தமிழகத்தை வடதமிழகம், தென்தமிழகம் என இரண்டாக பிரித்து சென்னையை யூனியன் பிரதேசமாக மாற்றுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. ஆனால் அது அவசியமற்றது. இவர்கள் உத்தரப்பிரதேசத்தையே இவ்வாறு பிரித்திருக்க வேண்டும். ஏனென்றால் அங்கு சுமார் 403 தொகுதிகள் உள்ளன.

தமிழகத்தை இரண்டாக பிரிப்பது அசியமற்றது. அவ்வாறு செய்வார்களாயின் அதற்கு எதிராக நாங்கள் போராட தயாராகவுள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.