தமிழில் அறிமுகமாகிறார் முன்னாள் மிஸ் இந்தியா வானியா மிஷ்ராதமிழில் அறிமுகமாகிறார் முன்னாள் மிஸ் இந்தியா வானியா மிஷ்ரா

ரஜினி, கமல், சிரஞ்சீவி நாகர்ஜீன் போன்ற முன்னணி ஸ்டார்களை வைத்து 50க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர் சுரேஸ் கிருஷ்ணா.

இவர் தற்போது சுரேஷ் கிருஷ்ணா புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் புதிய படக்கம்பெனியை தொடங்கியுள்ளார்.

இந்நிறுவனம் மூலம் புதிய படம் ஒன்றை தயாரித்து, இயக்கவிருக்கிறார்.

இப்படத்தின் பெயர் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், இப்படத்தில் நாயகனாக பிரின்ஸ் நடிக்கவுள்ளார்.

நாயகியாக 2012 மிஸ் இந்தியா வானியா மிஷ்ரா அறிமுகமாகின்றார்.

காதல், நகைச்சுவை, செண்டிமெண்ட் கலந்த ஆக்ஷன் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது.

wpid-2012-07-20_15-41-50

ஆசிரியர்