ஆஸ்கார் நடிகரையே வில்லனாக்கும் இயக்குனர்ஆஸ்கார் நடிகரையே வில்லனாக்கும் இயக்குனர்

2499611-nathan+jones

ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜெயம்ரவி த்ரிஷா நடிக்கும் படம் பூலோகம். ஜனநாதனின் உதவியாளரான என்.கல்யாண கிருஷ்ணன் இயக்கும் இந்தப் படத்தில் பாக்சராக நடிக்கிறார் ஜெயம் ரவி. குத்துச்சண்டை போட்டியில் அவருடன் வெளிநாட்டு வீரர்களும் சிலரும் மோதுவதுபோன்ற காட்சிகள் பூலோகம் படத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

24slid1

அப்படி மோதுகிற வெளிநாட்டு குத்துச்சண்டை வீரர்களே இப்படத்தில் வில்லன்களாகவும் நடிக்கின்றனர். அதில் ஒருவர் நாதன் ஜோன்ஸ் என்ற ஹாலிவுட் நடிகர். இவர் போலீஸ் ஸ்டோரி 4 உட்பட பல ஆங்கிலப்படங்களில் நடித்திருக்கிறார்.

இவரை பூலோகம் படத்துக்கு ஒப்பந்தம் செய்து கொடுத்தவர் அமெரிக்காவில் வசிக்கும் தமிழரான ஜான் எ ராஜசேகர். இவர் எந்திரன் படத்தில் தொழில்நுட்பப்பிரிவில் சி.இ.ஓ.வாகவும் பணியாற்றியவர்.

தன் செல்வாக்கை வைத்து பூலோகம் படத்தில் நடிக்க நாதன் ஜோன்ஸை ஒப்பந்தம் செய்து கொடுத்தாராம் ஜான் எ ராஜசேகர். பூலோகம் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையிலும் நாதன் ஜோன்ஸுக்கு பேசிய சம்பளத்தில் 30 லட்சத்தை தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவி இன்னும் கொடுக்கவில்லையாம்.

உள்ளூர் நடிகர்களுக்கு நாமத்தைப்போடுகிற தயாரிப்பாளர்களை பார்த்திருக்கிறோம். ஆஸ்கார் ரவி ஹாலிவுட் நடிகருக்கே நாமத்தைப்போட்டிருக்கிறாரே.

ஆசிரியர்