நடிகர் ரஜினி இரட்டை வேடத்தில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடித்து வரும் படம் ‘லிங்கா’. இப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மங்களூர் அருகிலுள்ள ஷிமோகாவில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக மங்களூர் விமான நிலையத்திற்கு வந்த ரஜினியிடம் பத்திரிகையாளர்கள் கேள்விகள் கேட்டனர்.
அப்போது அவர் கூறிய பதில், ‘லிங்கா’ படம் எனது பிறந்தநாளான டிசம்பர் 12-ம் தேதி ரிலீசாக உள்ளது. இப்படத்தை எனது ரசிகர்களுக்கு பிறந்தநாள் விருந்தாக அளிக்க திட்டமிட்டுள்ளோம் என கூறினார். தொடர்ந்து ரஜினியிடம் அரசியல் பிரவேசம் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு, அரசியலுக்கு நான் வர கடவுள் விரும்பினால் நிச்சயம் வருவேன். கடவுளின் விருப்பம்தான் என்னுடைய விருப்பம் என்று கூறினார்.
இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா ஆகியோர் நடிக்கின்றனர். தெலுங்கு நடிகர் கஜபதி பாபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். படத்தின் 80 சதவீத படப்பிடிப்புகள் முடிந்துவிட்ட நிலையில், இறுதிக்கட்ட படப்பிடிப்பை தொடர்ந்து 21 நாட்கள் மங்களூருவில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.